சீனாவை தொடர்ந்து ஜப்பான்  கடனை இடைநிறுத்தம் 

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்திற்கு தேவையான 51 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை சீனாவின் எக்ஸிம் வங்கி நிறுத்தி வைத்துள்ளது.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக சீனாவின் எக்ஸிடம் வங்கியிடமிருந்து பணம் விடுவிப்பது பிரதானமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை இலங்கைக்கான திட்டக்கடன் ஒன்றை ஜப்பானிய நிதி நிறுவனமும் இடைநிறுத்தியுள்ளது.

ஜெய்க்கா என்ற ஜப்பானிய சர்வதேச கூட்டுத்தாபனம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை விரிவாக்கும் திட்டத்திற்காக நிதியுதவியை வழங்கி வந்தது.

எனினும் இலங்கை அரசாங்கம் தாம் சர்வதேச நாடுகளில் இருந்து பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்தப் போவதில்லை என்று கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்த நிலையிலேயே ஜெய்க்கா நிறுவனமும் தமது திட்டக்கடனான 570 மில்லியன் டொலர் நிதியுதவியை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

Previous Story

'தனக்கு எதிரான தனதுரை'

Next Story

முகத்திடல் வரும் சடலங்கள்!