சில மணி நேரத்தில் தீர்வு!

-நஜீப்-

ஜனாதிபதி ரணில் மீண்டும் திசம்பருக்கு முன்னர் இனப் பிரச்சினைக்குத் தீர்வு என்று ஒரு கதையை கடந்த மே தினத்தில் சந்தைப்படுத்தி இருக்கின்றார். இந்த முறையும் இதனை நம்பி தமிழ் தலைவர்கள் அவர் பின்னால் ஓடினாலும் ஆச்சர்யப்படுவதற்க்கில்லை.

உண்மையில் இந்தியா இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வென்றைப் பெற்றுக் கொடுக்க இதய சுத்தியுடன் செயல்படுமாக இருந்தால் தீர்வுக்கு சில மணி நேரங்கள் போதுமானது. ஆனால் பிச்சைக்காரன் புண் போல ஈழத் தமிழர் பிரச்சினையை வைத்திருக்கத்தான் இந்தியாவும் விரும்புகின்றது.

பிராந்திய வல்லரசான இந்தியா உடன்படிக்கையில் எழுதப்பட்ட விடயங்களில் கூட  கேள்வி கேட்காது மௌனித்து நிற்கின்றது. மேலும் பெரும் பொருளாதார நெருக்கடி நேரத்தில் கூட இலங்கைக்கு இந்தியா உதவி இருக்கவிட்டால் நிலைமை எப்படி அமைந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க முடியாது.

ஆனால் ஏனோ இந்த விவகாரத்தில் இந்தியா உள் நோக்குடன் காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றது என்பது நமது நெடுநாள் குற்றச்சாட்டு. சீனா மீதான அச்சம் என்பதை விட இதற்கு இன்னும் பல நியாயங்கள் இருக்கக் கூடும்.

நன்றி: 07.05.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

கர்நாடகா: தொங்கு சட்டசபை? 

Next Story

பெண் கட்டுரையாளருக்கு டிரம்ப் பாலியல் தொல்லை:உறுதி செய்து நீதிமன்றம் !