சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி ஷிரந்தி…!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச சிரிலிய சவிய என்ற பெயரில் பராமரித்து வந்த போலி கணக்கு தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது ராஜபக்ச குடும்பத்தின் பல்வேறு நிதி மோசடிகள் தொடர்பான தகவல்களை இதன்போது தெரிவித்துள்ளார்.

சிரிலிய சவிய அமைப்புக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளின் ஆணை கடிதம் இரகசியமான முறையில் வங்கியில் இருந்து திருடப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

போலி கணக்கு

ஷிரந்தி ராஜபக்ச சிரிலிய சவிய என்ற பெயரில் ஒரு போலி கணக்கு பராமரிக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் கணக்கின் ஆணை கடிதம் காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி | Shiranthi Rajapaksha In Struggle

2006ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி கொழும்பு 10, டார்லி வீதியில் உள்ள மக்கள் வங்கியில் சிரிலிய சவிய என்ற பெயரில் 143/1/001/4/6235069 என்ற கணக்கு எண்ணில், தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்காமல், தவறான தகவல்களை சமர்ப்பித்து கணக்கு திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கணக்கின் இருப்பு தற்போது 43 மில்லியனாக ரூபாயாக உள்ளது. சிரிலிய அமைப்பிற்கு சொந்தமான வங்கிக் கணக்கின் தலைவர் ஷிரந்தி ராஜபக்சவாகும். கணக்கின் செயலாளராக கல்யாணி திசாநாயக்க மற்றும் பொருளாளராக நிரோஷா ஜீவனி என்பவர்கள் உள்ளனர்.

நிலையான வைப்புத் தொகை

88 சந்தர்ப்பங்களில் 8 கோடி 29 லட்சம் ரூபாய் வைப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 129 சந்தர்ப்பங்களில் 3 கோடியே 90 லட்சம் ரூபாக்கும் அதிகமான மீளப்பெறப்பட்டுள்ளது.

ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் அதிர்ச்சி :சிறை செல்ல தயாராகும் மகிந்தவின் மனைவி | Shiranthi Rajapaksha In Struggle

இந்த வங்கியில் சிரிலிய என்ற பெயரில் 100 லட்சம் ரூபாய் நிலையான வைப்புத் தொகையும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் நிதிக் குற்றப் பிரிவு இந்தக் கணக்கில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, திறைசேரியிடமிருந்து சிஎஸ்என் சேனல் பெற்ற தொகை 152 மில்லியன் ரூபாயாகும். தனது தாய் மற்றும் தந்தைக்கு கல்லறைகள் கட்டுவதற்காக நகர மேம்பாட்டு அதிகாரசபையிடமிருந்து கோட்டபாய ராஜபக்ச பெற்ற தொகை 35 மில்லியன் ரூபாவாகும்.

மல்வானை பிரதேசத்தில் ஒரு வீட்டை வாங்குவதற்காக பசில் ராஜபக்ச 208 மில்லியன் ரூபாய் பெற்றுள்ளார்” என பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மேலும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பாரிய நிதி மோசடியில் பல அரசியல்வாதிகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கடூழிய சிறைத்தண்டனையை 20 வருடங்களுக்கு மேல் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

“கவலை வேண்டாம்.. ரஷ்யா உங்களுக்கு உதவும்” ஈரானுக்கு புதின் வாக்குறுதி!

Next Story

ஈரான் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் அல்வா கொடுத்த 'த்ரில்லர்' கதை