நஜீப்
நன்றி: 17.05.2026 ஞாயிறு தினக்குரல்
வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஸதான் வர வேண்டும் என்று சிறையில் கூட கைதிகள் பேசிக் கொள்கின்றார்கள். இப்படி ஒரு கருத்தை சொல்லிவருகின்றார் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பர்ணாந்து.
2015ல் மஹிந்த ராஜபக்ஸாவை தோற்கடித்தது இந்த நாட்டு மக்கள் செய்த பெரும் தவறு என்றும் அவர் குடி மக்களைக் குற்றம் சாட்டி வருகின்றார்.
இதற்கிடையில் ஏஐ தொழிநுட்பத்தின் மூலம் மஹிந்த ராஜபக்ஸாவை கம்பீரமான ஆளாக நிமிர்த்தி எடுத்து அந்தப் போட்டோக்களை வைத்து இப்போது செய்திகளை ராஜபக்ஸ விசிறிகள் வெளியிட்டுக் கொண்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
இதற்கிடையில் மைத்திரி மஹிந்த கோட்டா ஆகியோர் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் ஒரு தகவல் வருகின்றது.
நாமல் ஜனாதிபதியாக முதலில் ஐமச. தலைவர் சஜித்தை அரசியலில் முந்த வேண்டும்.மாகாணசபை தேர்தல் வந்தால் களநிலவரத்தை பார்க்கலாம்.





