செய்தி சிறந்த இந்திய பேட்ஸ்மேன்கள் December 19, 2021 The Captain of the Indian Cricket Team, Virat Kohli and noted actor Anushka Sharma calls on the Prime Minister, Shri Narendra Modi, in New Delhi on December 20, 2017. 2021ஆம் ஆண்டு முடிவுக்கு வர போகிறது. இந்த ஆண்டில் இந்திய அணி வீரர்கள் பல சாதனைகளை செய்தனர். நடப்பாண்டில், இந்திய வீரர்கள் குறிப்பாக பேட்ஸ்மேன்களில் செயல்பாட்டை வைத்து அவர்கள் யார் முதல் 5 இடம் பிடித்துள்ளார்கள் என்பதை காணலாம். டெஸ்ட், டி20, ஒருநாள் என மூன்று போட்டிகளிலும் அவர்களது செயல்பாடுகளை வைத்து தான் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் சிறந்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளார் அதிரடி வீரர் ரிஷப் பண்ட். டெல்லி அணியின் கேப்டனாக ஐ.பி.எல். தொடரில் களமிறங்கிய அவர் சிறப்பாக செயல்பட்டார். டெஸ்ட் போட்டியில் அவரது ஃபார்ம் சற்று குறைந்தாலும்,முக்கிய பல வெற்றிகளை அவர் பெற்று தந்துள்ளார். சூரியகுமார் யாதல் இந்த பட்டியலில் சூரியகுமார் யாதவ் 4வது இடத்தை பிடித்துள்ளார். 2021ஆம் ஆண்டு அவருக்கு சிறந்த ஆண்டாகவே அமைந்தது. ஏன் என்றால் இந்திய கிரிக்கெட் அணியில் 2021ஆம் ஆண்டில் தான் அவர் இடம்பிடித்தார். ஐ.பி.எல். தொடரின் இரண்டாவது பாதியில் சற்று தடுமாறினாலும், ஓயிட் பால் கிரிக்கெட்டில் தனது இடத்தை சூரியா தக்கவைத்து கொண்டார் என்றே சொல்லலாம். விராட் கோலி இந்த பட்டியலில் இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி 3வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலிக்கு ஏன் இவ்வளவு கம்மியான இடம் என்று நீங்கள் நினைத்தால், அவர் 2021ஆம் ஆண்டில் இதுவரை அவர் சதம் அடிக்கவில்லை. அப்போது ஏன் மூன்றாவது இடம் என கேட்டால், 2021ஆம் ஆண்டில் 10 சர்வதேச டி20 போட்டியில் விளையாடி 299 ரன்கள் குவித்துள்ளார். சராசரியாக 74 ரன்கள்.மேலும் பெங்களூரு அணியையும் பிளே ஆப் வரை கொண்டு சேர்த்தார் கே.எல்.ராகுல் 2021ஆம் ஆண்டு கே.எல்.ராகுலுக்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது. இந்திய அணியின் துணை கேப்டன் பதவி, டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக சிறப்பான ஆட்டம், டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமை என ராகுல் கலக்கினார். இதனால் அவருக்கு 2வது இடம் ரோகித் சர்மா 2021ஆம் ஆண்டின் சிறந்த இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெறுகிறார் ரோகித் சர்மா. தொடக்க வீரராக இங்கிலாந்து மண்ணில் சதம் , 2021ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர், ஒருநாள், டி20 அணியின் புதிய கேப்டன் என்ற பல உச்சத்தை தொட்டதால் அவருக்கு முதலிடம். Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email You might be interested in September 10, 2025September 10, 2025 හරක්කටාගෙන් කෝටි 50 ක් කප්පම් ගත් නලුවා කවුද? September 10, 2025September 10, 2025 மகிந்த ராஜபக்சவுடன் கெஹேல்பத்தர பத்மே! මනම්පේරි කන්ටේනර් ගෙනාපු වීඩියෝ එළියට/නුවර එළි ගිය හැටිත් ඒ අතර/ගෙනා බඩු වලින් අයිස් කිලෝ14 ක් හදලා. September 10, 2025 චමුදිත පොහොට්ටුව නාවපු හැටි September 10, 2025 කුඩු කන්ටේනර් දෙකේ ඇත්ත කතාව. පාර්ලිමේන්තුවෙන් ඇසෙයි. September 9, 2025September 9, 2025 இஸ்ரேலின் கத்தார் சம்பவம் : அமெரிக்காவின் திட்டம் தான் September 9, 2025September 9, 2025 நேபாளத்தில் அமைச்சருக்கு அடி, உதை – கலவரமான Gen Z புரட்சி! – Previous Story சண்ட கோழி..!! Next Story சிமோன் பைல்ஸுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
September 10, 2025September 10, 2025 மகிந்த ராஜபக்சவுடன் கெஹேல்பத்தர பத்மே! මනම්පේරි කන්ටේනර් ගෙනාපු වීඩියෝ එළියට/නුවර එළි ගිය හැටිත් ඒ අතර/ගෙනා බඩු වලින් අයිස් කිලෝ14 ක් හදලා.