சிரிதரனை மிஞ்சும் சுமந்திரன்!

சிரிதரனை மிஞ்சும் சுமந்திரன்!

-நஜீப்-

Sumanthiran and Sritharan submit applications for ITAK leader post - DailyNews

(நன்றி: 06.10.2024 ஞாயிறு தினக்குரல்)

தமிழரசுக் கட்சியின் தலைவர் சிரிதரன் என்ற சொல்லப்பட்டாலும் அந்தக் கட்சியில் இருக்கின்ற சுமந்திரன் மற்றும் மாவை போன்றவர்கள் அவரை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாது ஊடகச் சந்திப்புக்களை நடாத்தி வருகின்றார்கள். கூட்டம் போடுகின்றார்கள்.

தீர்மானங்களை அறிவிக்கின்றார்கள். ஏன் சிரிதரனுக்கு இப்படி ஒரு நிலை என்பது நமக்குப் புரயவில்லை. ஏதோ காரணங்களினால் சிரிதரன் அடக்கி வைக்கப்பட்டிருக்கின்றாறோ தெரியாது. தலைமை தனது ஆளுமையை காட்சிப்படுத்தாத நிலையில் இப்படியான நிலமைகள் கட்சிகளில் ஏற்படுவது இயல்பானது.

இதனால்தான் சுமந்திரன் கொழும்புத் தலைமைகளுடன் நெருக்க உறவை வளர்த்துக் கொள்கின்றார். தலைவருக்குத் தெரியாமல் சுமந்திரன் மாவை போன்றவர்கள் செய்படுகின்ற போது அவர்களுக்கு எதிராக எப்போதாவது சிரிதரன் நடவடிக்கை எடுத்திருக்கின்றாரா என்று நாம் கேள்வி எழுப்புகின்றறோம்.

சிரிதரனின் இயலாமையும் தமிழரசுக் கட்சியின் இன்றைய அவல நிலைக்குக் காரணமாக இருக்கின்றது.

விகி கூறுகின்ற நியாயங்கள்!

-நஜீப்-

Sri Lanka's parliament speaker allows Wigneswaran's speech to stand | Tamil Guardian

(நன்றி: 06.10.2024 ஞாயிறு தினக்குரல்)

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரை தன்னுடன் வைத்திருக்க ஜனாதிபதி ரணில் பணம், பார் லைசன் மற்றும் வாகனப் பேர்மிட்டுக்களையும் கொடுத்தார்.

அப்படி சலுகை பெற்றவர்கள் பலர் நம்ப முடியாத நபர்களாக இருந்தார்கள். அதில் மரிக்கார் வாகனப் பேர்மிட் விவகாரத்தில் மூக்குடைபட்டார். மு.கா. உறுப்பினர் ஹரிஸ் பார் பேர்மிட் பெற்ற முஸ்லிம் எம.;பி. க்கள் பற்றித் தனக்குத் தெரியும் என்று சொல்லி இருந்தார்.

அஸ்ரஃப் காலத்தில் ஹிஸ்புல்லாஹ் பார் லைசன் கொடுத்த போது அதற்கு தலைவர் எடுத்த நடவடிக்கைகள் என்றும் தகவல்கள் இருக்கின்றன. தற்போதய மு.கா. தலைவர் ஹக்கீம் அவர்கள் யார் என்று இதுவரை ஹரிசிடம் விளக்கம் கேட்டாரா?.

பார் வரிசையில் தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் குமார் மற்றும் விக்ணேஸ்வரன் போன்றவர்கள் நாமங்களும் இருக்கின்றன. ஒரு நீதியரசரான விக்ணேஸ்வாரன் பெண்ணுக்கு கொடுத்த பார் லைசன் கொடுத்ததற்கு கூறும் நியாயங்கள் ஜீரணிக்கக் கூடியதாக இல்லை.

இதனால் இன்று விகி. மூக்குடைபட்டிருக்கின்றார். அவரது சுபாவத்துக்கு இது எந்த வகையிலும் பொறுத்தமில்லை.

ஈகோவால் நடக்கும் பேரழிவு!

-நஜீப்-

Ranil vs Sajith... - Political Cartoons of Sri Lanka | Facebook

(நன்றி: 06.10.2024 ஞாயிறு தினக்குரல்)

ரணில்-சஜித் அரசியலும் கூட்டணிகளும் தோற்றுப் போக அவர்களிடையே இருந்து வரும் ஈகோ பிரச்சினைதான் அடிப்படைக் காரணம். ஜனாதிபதித் தேர்தலிலும் அதுதான் நடந்தது. இன்று பொதுத் தேர்தலிலும் ரணில் மற்றும் சஜித் தரப்பினரிடையே கூட்டணி ஒன்று பற்றி முயற்சிகள் நடந்தன.

துவக்கத்தில் இருந்தே சஜித் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ரணிலை விட மக்கள் மத்தியில் சஜித்துக்குத்தான் செல்வாக்கு அதிகம். ஆனால் ரணில் தலைமைப் பதவியை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

ஜனாதிபதித் தேர்தலில் அனுர 5634915 வாக்குகள்.  சஜித் 4363035  வாக்குகள். ரணில் 2299767 வாக்குகள். இருவரும் மொத்தம் 6662802 வாக்குகளைப் பெற்றனர். இது அனுர பெற்றுக் கொண்ட வாக்குகளைவிட (1027887) பத்து இலட்சம் வாக்குகள் அதிகம்.

இந்த இரு தலைவர்களிடையே நடக்கின்ற ஈகோ போட்டியால் ஆட்சி அதிகாரத்தை பறிகொடுப்பதுடன் தமது சகாக்களின் அரசியல் எதிர்காலத்தையும் இவர்கள் பலிகொடுத்து விடுகின்றனர்.

இதற்கு ரணில் முக்கிய காரணமாக இருந்தாலும் ஏதோவகையில் சஜித்தும் காரணம். இருவரும் தனி வழி. அதன் அறுவடையை பொதுத் தேர்தலிலும் இவர்கள் பார்ப்பார்கள்.

 

Previous Story

ஹிஸ்புல்லா தான் டார்கெட்..

Next Story

இஸ்ரேல் ஹமாஸ்: 'காயம், வலி, ஆதரவற்ற நிலை'- OCT. 7க்கு பிறகு தலைகீழாக மாறிய வாழ்க்கை