சிக்கிய மோதி: நேரில் பார்த்தவர்கள் தகவல்கள்

தெற்கு பஞ்சாபில் உள்ள ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பியாரேனா கிராமம் வித்தியாசமான சூழ்நிலையுடன் காணப்படுகிறது. கடந்த வியாழன் நான் இந்த கிராமத்திற்குச் சென்றபோது, அங்கு அமர்ந்திருந்தவர்கள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் யாரும் வெளிப்படையாகப் பேசத் தயாராக இல்லை.

பிரதமரின் கான்வாய் இங்குதான் தடைபட்டதா என என்னைச் சந்தித்த நபரிடம் கேட்டபோது, “இதுபற்றித் தெரிந்தாலும் எதுவும் சொல்லமாட்டேன்.” என்றார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி இங்கு சில நிமிடங்கள் காத்திருந்த பிறகு டெல்லி திரும்ப நேர்ந்ததால் அவர் ஜனவரி 5 காத்திருந்த இந்த பகுதி, இந்த கிராமம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

ஃபெரோஸ்பூரில் உள்ள PGI செயற்கைக்கோள் மையத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக ஜனவரி 5ஆம் தேதி பிரதமர் மோதி சென்று கொண்டிருந்தார், ஆனால் லூதியானா-ஃபெரோஸ்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பியாரேனா கிராமத்திற்கு அருகே விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அவரது கான்வாய் திரும்பச் சென்றது.

தல்வண்டி பாய் சௌக்கிலிருந்து ஃபெரோஸ்பூருக்கு செல்லும் வழியில் பியாரேனா மேம்பாலம் உள்ளது. இந்த இடம் நகரத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த இடம் பாரதிய ஜனதா கட்சி உத்தேசித்திருந்த பேரணி நடந்த பகுதியில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கடலை வியாபாரி: ‘நான் பதற்றமாக இருந்தேன்

ஊடகங்கள் மட்டுமின்றி பஞ்சாப் மற்றும் மத்திய உளவுத்துறையும் பிரதமரின் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விசாரித்து வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.விவசாயிகள் போராட்டம் காரணமாக பியாரேனா கிராமத்தில் உள்ள மேம்பாலம் மேலா பிரதமரின் வாகனம் வந்து நின்றதை சம்பவ நாளில் கடலை விற்கும் புலம்பெயர்ந்த தொழிலாளி பார்த்துள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிகாரில் இருந்து வேலை தேடி இங்கு வந்த அப்துல் ஹனான், திடீரென பாலத்தில் இருந்து ஆயுதம் ஏந்திய போலீஸ் மற்றும் கவச வாகனங்கள் பார்த்ததாக கூறினார்.

இந்த சம்பவத்தை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன், அந்த வாகன தொடரணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் வாகனமும் இருந்தது என்பது எனக்கு தெரியாது.

அப்துல் ஹனான் பத்து ஆண்டுகளுக்கு முன் பிகாரில் இருந்து வந்து ஃபெரோஸ்பூரில் குடியேறி கடலை விற்கிறார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு பிகாரில் இருந்து வேலை தேடி இங்கு வந்த அப்துல் ஹனான், திடீரென பாலத்தில் இருந்து ஆயுதம் ஏந்திய போலீஸ் மற்றும் கவச வாகனங்கள் திரும்பி செல்வதை பார்த்ததாக கூறினார்.

“இந்த சம்பவத்தை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் அந்த வாகன தொடரணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் வாகனமும் இருந்தது என்பது எனக்கு தெரியாது.”

“இந்த தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து கடைகளையும் மூட காவல்துறை ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. அதனால் பிரதமரின் உரையைக் கேட்க ஃபெரோஸ்பூருக்குச் செல்ல நான் தயாராகிக் கொண்டிருந்தேன். என்னால் கடலை விற்க முடியவில்லை, பிரதமர் கூட்டம் முடிந்த பிறகாவது உணவிற்கு கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம் என இருந்தேன்,” என்றார்.

“முதலில் எனக்கு அனைத்தும் இயல்பாகவே இருந்தது, ஆனால் கேமராமேன்களும் மூத்த போலீஸ் அதிகாரிகளும் வந்ததும், நான் கொஞ்சம் நடுங்கினேன். எனக்கு அருகே சாலையில் இருந்து திரும்பிய பெரிய கவச வாகனங்களில் பிரதமரும் இருப்பதாக என்னிடம் கூறப்பட்டது.”

விவசாயி பல்தேவ் ஜிரா: “எங்களுக்குத் தெரியாதுமோதி இங்கே கடந்து செல்வார்

இந்த சம்பவத்திற்குப் பிறகு, பியாரேனா கிராமத்தின் மேம்பாலத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகளைத் தேடச் சென்றேன்.

இறுதியில் நான் பல்தேவ் சிங் ஜிரா என்ற விவசாயியை சந்தித்தேன்.

பிரதமரின் கான்வாய் திரும்புவது தொடர்பாக போலீஸ் தன்னைக் கைது செய்துவிடலாம் என்று பல்தேவ் சிங் பயந்ததால், அவர் தனது தரப்பை விளக்க விரும்பினார்.

பல்தேவ் சிங் குறிப்பிட்ட இடத்திற்கு எனது கேமராமேனுடன் வந்தேன். மோசமான வானிலை காரணமாக அவரை அவரது காரிலேயே சந்தித்தோம்.

அப்போது பல்தேவ் சிங், “எனது தலைமையில் சுமார் நூறு விவசாயிகள் ஃபெரோஸ்பூருக்குச் சென்றோம். எங்கள் அமைப்பு நிர்ணயித்த திட்டத்தின்படி பிரதமரின் கொள்கைகளுக்கு எதிராக நாங்கள் துணை ஆணையர் அலுவலகம் முன் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம்,” என்றார்.

“ஆனால் வழியில் ஏதோ நடந்தது, அதைப் பற்றி எங்களுக்குத் தெரியாது.”

பல்தேவ் சிங் ஜிராவின் கூற்றுப்படி, அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

“பிரதமரின் கான்வாய் பியாரேனா கிராமத்தை நெருங்கியபோது, தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் எங்களைத் தடுத்து நிறுத்தினர். பிரதமர் நரேந்திர மோதி இந்த சாலையைக் கடப்பார் என்று எங்களுக்குத் தெரியாது என்று நான் சத்தியம் செய்கிறேன்,” என்கிறார் பல்தேவ்.

“பேருந்துகளில் வரும் பாஜகவினர் பிரதமர் பங்கேற்கும் பேரணிக்குசெல்ல நீங்கள் வழிவிட வேண்டும் என்று காவல்துறை எங்களிடம் கூறியது, நாங்கள் ஒப்புக்கொண்டோம்,” என்றார் பல்தேவ் சிங்.

ஆனால் பாஜகவினர் தங்களுடன் வாக்குவாதம் செய்து வன்முறையில் ஈடுபட்டபோது, எந்த சூழ்நிலையிலும் வழி விட மாட்டோம் என விவசாயிகள் காவல்துறையினரிடம் கூறினர்.

இந்த நேரத்தில் பியாரியானா கிராமத்தில் உள்ள மேம்பாலத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோதி சில நிமிடங்கள் கழித்து எப்போது திரும்பினார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை என்கிறார் பல்தேவ்.

உண்மை என்னவென்றால், மிஸ்ரி வாலா கிராமத்தில் உள்ள மேம்பாலத்திற்கு பிரதமர் சென்றபோது, அதே சாலையில் விவசாயிகள் போராட்டம் நடத்தியது அங்கிருந்து தெரிந்தது.

பெண் விவசாய தலைவர்

விவசாயிகள் தலைவர் சுக்விந்தர் கவுர் கூறுகையில், மாவட்ட தலைமையகத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஏற்கெனவே அழைப்பு விடுத்தனர். இது எதிர்பாராத நிகழ்வு. இதை அரசியலாக்குவதில் அர்த்தமில்லை என்றார்.

லக்கிம்பூர் கேரியில் இரண்டு விவசாயிகள் கைது செய்யப்பட்டது, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் முடிவதற்கு முன்பு அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அலைகழித்தது போன்றவை தான் எங்களுடைய போராட்டத்துக்கு காரணம் என்று அவர் கூறினார்.

சுக்விந்தர் கவுரின் கூற்றுப்படி, பர்னாலாவில் விவசாயிகள் அமைப்புகளின் கூட்டத்திற்குப் பிறகு போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் போராட்டம் செய்ய பெரோஸ்பூருக்கு வருவார்கள் என காவல்துறைக்கு தெரிந்திருந்த அதே சமயம், அவர்கள் பேரணியாக செல்வார்கள் என்று மட்டுமே கருதியிருந்ததும் களத்தில் இருந்தவர்களிடம் பேசியதை வைத்து அறிய முடிந்தது.

பாதையை திறக்க பேச்சுவார்த்தை

பாரதிய கிசான் யூனியன் கிராந்திகாரி அமைப்பினர் பியாரேனா கிராமத்தில் உள்ள மேம்பாலம் மீது தர்னாவில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக இந்த விவசாயிகள் அமைப்பின் மாநிலத் தலைவர் சுர்ஜித் சிங் பூலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்தப் போராட்டம் தனது அமைப்பைச் சேர்ந்தது என்று தெளிவுபடுத்தினார். இதனால் சுர்ஜித் சிங் பூலை நேரில் சந்திக்க சென்றோம்.

“தமது அமைப்பின் செயற்பாட்டாளர்கள் போராட்டம் நடத்தும் பாதையை பிரதமர் கடப்பார் என்பது எங்களுக்கு தெரியாது.”

இந்த தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடந்தபோது, பிரதமரின் கான்வாய் திரும்புவதற்கு சில நிமிடங்களுக்கு முன், போலீஸ் அதிகாரிகள் போராட்ட இடத்திற்கு வந்தது உண்மைதான். ஆனால், அவர்கள் தர்னா செய்யாதீர்கள், சாலையை விட்டு விடுங்கள். பிரதமர் இங்குதான் செல்ல வேண்டும்’ என்றார்கள். என்கிறார் சுர்ஜித் பூல்

பேரணி நடைபெறும் இடத்தில் இருந்து போராட்டத்தை தடுக்க போலீசார் முயன்றனர்

“போலீசார் எங்களை வெளியேற்ற வந்தார்கள் “

“ஒரு முக்கிய பிரமுகர் சாலையை கடக்கும்போது, அங்குள்ள பாதை பல மணிநேரங்களுக்கு முன்பே காலியாக்கப்படும் என்பதை நாங்கள் புரிந்துகொண்டதால், ஊழியர்கள் இதை எளிதாக எடுத்துக் கொண்டனர். ஆனால் பிரதமரின் விஷயத்தில் ஏன் முன்கூட்டியே பாதையை காலியாக்கவில்லை என்று எங்களுக்குத் தெரியவில்லை.”

மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் பஞ்சாப் விவசாய அமைப்புகள் பிரதமரின் பஞ்சாப் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்ததை இங்கு குறிப்பிடலாம்.

கிசான் யூனியனில் இடம்பெற்றுள்ள 32 விவசாய அமைப்புகள் இந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளன.

பாரதிய கிசான் யூனியன் உக்ரஹான், பாரதிய கிசான் யூனியன் சித்துப்பூர், பாரதிய கிசான் யூனியன் கிராந்திகாரி, கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி, பாரதிய கிசான் யூனியன் ஏக்தா தகொண்டா மற்றும் கீர்த்தி கிசான் யூனியன் ஆகியவை பிரதமருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தவை.

ஃபெரோஸ்பூரில் பிரதமர் நரேந்திர மோதி நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக இந்த அமைப்புகளின் தலைவர்கள் சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தனர்.

பிரதமருக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை

பாரதிய கிசான் யூனியன் கிராந்திகாரியின் தலைவர் சுர்ஜித் சிங் பூல் கூறுகையில், விவசாயிகள் போராட்டத்தால் நரேந்திர மோதியின் கான்வாய் திருப்பி அனுப்பப்பட்டதாக மத்திய அரசும் பஞ்சாப் அரசும் கூறுவது சரியல்ல என்றார்.

“எங்கள் பார்வையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நரேந்திர மோதி திரும்பியிருக்கலாம். ஆனால் அவரது பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் வகையில் எதுவும் நடக்கவில்லை.”

“பிரதமருக்கு எதிராக நாங்கள் எந்தப் போராட்டமும் நடத்தவில்லை. எந்த விதமான தாக்குதலையும் நடத்தவில்லை. இது தற்செயலாக நடந்தது,” என்கிறார் சுர்ஜித் சிங் பூல்.

மேலும் அவர், “பிரதமரை எதிர்த்தது பாரதிய கிசான் யூனியன் கிராந்திகாரி உறுப்பினர்கள் மட்டுமல்ல, நாங்கள் ஏற்கெனவே தர்னா செய்து கொண்டிருந்த இடத்திற்கு திடீரென்று வந்தது பிரதமர் தான். எங்களைப் போலவே பல அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

“பிரதமர் நரேந்திர மோதி மூன்று விவசாயச் சட்டங்களை திரும்பப் பெற்றார் என்பது வேறுபட்டது, ஆனால் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் அவற்றிற்கு எதிராக போராடி இறந்துள்ளனர்.”

”லக்கிம்பூர் கேரியில் என்ன நடந்தது என்பதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா இன்னும் மோதி அரசில் இடம்பெற்றிருப்பதன் மூலம் உணரலாம். அதனால் விவசாயிகளுக்கு கோபம் வருவது நியாயமானதுதான்,” என்றார் அவர்.

போலீஸ் வட்டாரங்களின்படி, பிரதமர் நரேந்திர மோதி ஃபரித்கோட்டில் இருந்து பர்சாதா தல்வண்டி பாய் வழியாக ஃபெரோஸ்பூருக்குச் செல்லவிருந்தார், ஆனால் தல்வண்டி பாய் சௌக்கிற்குச் செல்லாமல், வெளிப் பாதையில் மிஸ்ரி வாலா கிராமத்தை அடைந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையில் பல உயர் அதிகாரிகளிடம் பேசினேன். ஆனால் அவர்கள் பேச விரும்பவில்லை.

பிரதமரின் பேரணியை முடக்கவே இப்படி செய்தனர்

இதற்கிடையில், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சூர்ஜேவாலா ஆகியோர் பேரணியில் பங்கேற்கவில்லை என்ற அறிக்கை நரேந்திர மோதிக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். இதன் விளைவாக, அவர்கள் தங்கள் திட்டத்தை மாற்றினர்.

பாஜக பஞ்சாப் பிரிவு தலைவர் அஷ்வானி சர்மா ஃபெரோஸ்பூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோதிக்கு போதிய பாதுகாப்பை வழங்க பஞ்சாப் அரசு தவறிவிட்டது. எல்லைப் பகுதியில் நாட்டின் பிரதமருக்குப் பாதுகாப்பு அளிக்க முடியாத அரசுக்கு ஆட்சியில் நீடிக்க உரிமை இல்லை” என்கிறார்.

“கட்சித்தொண்டர்கள் நிறைந்த எங்கள் பேருந்துகள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டன, பேரணியில் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்பட்டது. இவை அனைத்தும் பிரதமரின் பேரணியை முடக்கும் நோக்கத்துடனேயே செய்யப்பட்டது,” என்றார் அவர்.

அமிர்தசரஸ்-தர்ன் தரண் பைபாஸ், கத்து நங்கல், ஹரிகே பட்டன், ஸ்ரீ முக்த்சர் சாஹிப், மகு உள்ளிட்ட பல பகுதிகளில் அதன் 3443 பேருந்துகள் நிறுத்தப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

மறுபுறம், பிரதமரின் பேரணியில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் ஒருவர், பேரணியில் கலந்து கொள்ளாததற்கு காரணம் மோசமான வானிலை மற்றும் கனமழை என்று பெயர் குறிப்பிட விரும்பாத நிபந்தனையுடன் கூறினார்.

இதேவேளை, பாஜகவினர் வந்த பேருந்துகளை நிறுத்தியது முக்கிய காரணம் அல்ல. மக்கள் தாமாகவே முன்வந்து பேரணிக்கு செல்லவில்லை என்று பைரேனா தர்னாவில் ஈடுபட்ட விவசாயி பல்தேவ் சிங் கூறினார்.

பிரதமர் நின்ற இடத்துக்கு அருகே இருந்த கிராமப்பெரியவர் என்ன சொலகிறார்?

இதற்குப் பிறகு நான் கிராமங்கள் வழியாக அலைந்து, பிரதமரின் கான்வாய் திரும்பிய இடத்திற்கு மிக அருகில் உள்ள ரதகேரா கிராமத்தை அடைந்தேன்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியப் பிரதமர் சிலரின் எதிர்ப்பால் திரும்பிச் சென்றது பெரிய விஷயம் என்று அந்த கிராமத்தின் சர்பாஞ்ச் ராஜ்தீப் சிங் கூறினார்.

“பிரதமர் எங்கள் பிராந்தியத்திற்கு சில பெரிய திட்டங்களை அறிவிப்பார் என்று நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தோம் என்பதில் சந்தேகமில்லை.””அதே நேரத்தில், ஒரு வருட விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாபியர்கள் எதை இழந்தார்கள், என்ன பெற்றார்கள் என்பதுதான் எங்கள் மனதில் உள்ள கேள்வி.””இது நடந்திருக்கக்கூடாது என்பது உண்மைதான், ஆனால் இது ஒரு பிராந்தியத்தின் அடிப்படை சிந்தனையுடன் நடந்தது. அது பிரதமராக இருந்தாலும் சரி, ஜனநாயக அளவில் இருந்தாலும் சரி,” என்றார் அவர்.

பெண் விவசாயி: ‘தொழில்நுட்ப சிக்கல் மட்டுமே

சுக்விந்தர் கவுர் என்ற பெண் விவசாயி, “பிரதமரின் வருகை இறுதியாக திட்டமிடப்பட்டபோது அவரது போக்குவரத்து பாதையை ஏன் காலியாக்கவில்லை?” என்று கேட்கிறார்.

பிரதமரின் பாதுகாப்பு பிரச்னை தொழில்நுட்ப ரீதியிலானது மட்டுமே என குறிப்பிடுவது தவறு என்பதை தெளிவுபடுத்துகிறேன். இது எல்லைப் பகுதி என்பது உண்மைதான் ஆனால் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பையும் பிரதமரின் இந்த சம்பவத்தையும் இணைத்துப்பார்க்கக் கூடாது எனகிறார் அவர்.

“பஞ்சாபில் அமைதியும் நல்லிணக்கமும் உள்ளது, நாங்கள் ஒன்றாக வாழ்கிறோம், எங்கள் உரிமைகளுக்காக போராடுகிறோம். இதுபோன்ற சூழ்நிலையில், உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறோம் என எங்களை குற்றம்சாட்டுவது பாஜகவின் சிந்தனையாக இருக்க முடியும். நாட்டு மக்களின் சிந்தனையாக அது இருக்க முடியாது,” என்கிறார் அவர்.

 

 

Previous Story

ஓமிக்ரான் லேசான வைரஸ்னு நினைச்சிராதீங்க.

Next Story

டொலருக்குத் திண்டாட்டம் ரூபாவுக்கு கொண்டாட்டம்