சாடிக்கு ஏற்ற மூடிகள்

-நஜீப்-

தேர்தல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் நாட்டில் பல கூட்டணிகள் உதயமாகி இருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை பகைவரும் இல்லை என்ற நியதியில் இவை எல்லாம் சகஜமானதுதான்.

இதற்கு நல்லதொரு கதை இது. படித்துப் பாருங்கள் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்விடம் நீங்கள் ஹக்கீமை எப்படி எல்லாம் கேவலமாக பேசி இருக்கின்றீர்கள். எப்படி அவருடன் போய் இணைந்தீர்கள் என்று  கேட்ட போது. அரசியல் என்றால் அப்படித்தான். அவரும் என்னை ஏசி இருக்கின்றார். நானும் அப்படித்தான் செய்தேன்.

ஏன் மஹிந்த-மைத்திரி, மைத்திரி-வீரவன்ச என்பவர்களைப் பாருங்கள் அவர்கள் கீறியும் பாம்பும் போல் அல்லவா இருந்தார்கள். இப்போது கூட்டணி போட்டு அரசியல் செய்வது போலத்தான் நாமும் என்று சொல்லி மனிதன் பதில் கொடுத்திருப்பதுடன் மரணம் வரை இதன் பின் மரத்திலிருந்து ஒருபோதும் இறங்க மாட்டேன் என்றும் கலாநிதி வாக்குறுதி கொடுத்திருக்கின்றார்.

ஹக்கீமும் நான் ஒரு போதும் எவரையும் கட்சியல் இருந்து வெளியேற்றவில்லை. எவரும் விரும்பிய போது உள்ளே வரலாம் அதேபோன்று வெளியிலும் போகலாம் என்று பதிலுக்குச் சொல்லி இருக்கின்றார். எப்படி இருக்கின்றது தலமைத்துவம்-கட்டுப்பாடு! சாடிக்கு ஏற்ற மூடிகள் இப்படித்தான் சமையும்.

நன்றி: 22.01.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

போதை ஒழிப்பு:ஆமை வேகத்தில்  ஜம்­இய்­யத்துல் உலமா!

Next Story

பாததும்பரை தேர்தல் நகைச்சுவை!