நஜீப்
நன்றி 15.11.2026 ஞாயிறு தினக்குரல்
ஈஸ்டர் தாக்குதல்தாரியான சஹ்ரான் ஹாசிம் பற்றிய ஒரு பார்வை இது. 2009 ஆகஸ்ட் 16ல் வெளியான சன்டே டைம்சுக்கு வழங்கிய பேட்டில் தன்னிடம் ஆயுதங்களோ அல்லது வெளிநாட்டு பணங்களோ கிடையாது என்று அவர் அந்தப் பேட்டியில் கூறி இருக்கின்றார்.
தாக்குதலுக்கு பத்து வருடங்களுக்கு முன்னர் அவர் விட்ட கதை இது. காத்தான்குடியில் சஹ்ரான் ஆதிக்கம் எந்தளவுக்கு கொடிகட்டிப் பறந்தது என்பதற்கு ஹிஸ்புல்லா வழங்கி இருந்த வாக்குமூலம் நல்ல சான்று.
காத்தான்குடியில் நடக்கின்ற அரசியல் மேடைகளில் சங்கீதமோ பாடல்களோ ஒலிபரப்பக் கூடாது என்று சஹ்ரான் அரசியல் கட்சிகளுக்கு கட்டளை போட்டிருந்தார் என்று அவர் கூறி இருக்கின்றார்.
அங்கிருக்கின்ற முஸ்லிம் பாடசாலைகளுக்கும் சஹ்ரான் இந்த கட்டளைகளை போட்டிருந்ததாவும் வாக்குமூலங்களில் தெரிய வந்திருக்கின்றது.
காத்தான்குடியில் ஹிஸ்புல்லாவுக்கே கட்டளை போடும் அளவில் சஹ்ரான் இருந்திருக்கின்றான் என்றால் மனிதன் நல்ல கில்லாடியாகத்தான் அங்கு செயல்பட்டிருக்க வேண்டும்.





