சர்வதேச ஊடகங்களின் முக்கிய தலைப்பு செய்தியாக மாறிய இலங்கை ஜனாதிபதி தேர்தல்

பல முக்கிய சர்வதேச ஊடகங்களின் பிரதான தலைப்புச் செய்திகளாக இலங்கையில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் மாறியுள்ளது.

BBC, REUTERS, CNN மற்றும் NDTV போன்ற ஊடங்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

ஜனாதிபதித் தேர்தல்

இலங்கையில் கோட்டா கோ மக்களின் போராட்டத்தின் பின்னர் புதிய தலைவரை தெரிவு செய்யும் நோக்கில் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

சர்வதேச ஊடகங்களின் முக்கிய தலைப்பு செய்தியாக மாறிய இலங்கை ஜனாதிபதி தேர்தல் | Foreign Media Focus On Sri Lankan Election

BBC செய்தி சேவை அதன் தலைப்பில், “மக்கள் எதிர்ப்புகளால் ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் இலங்கையில் நடைபெறும் முதல் தேர்தலில் வாக்களிப்பு” என குறிப்பிட்டுள்ளது.

போராட்டங்கள் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றப்பட்டதன் பின்னர் இலங்கை தனது முதலாவது ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Story

தப்பியோடும் மகிந்த சகாக்கள் - சிக்கிய முக்கிய புள்ளி

Next Story

வாக்கு எண்ணிக்கையும் புதிய ஜனாதிபதியும்!