சம்பந்தன் நீக்கமும் மறுப்பும்!

-நஜீப்-

சம்பந்தன் தலைமைப் பதவியல் இருந்து நீக்கப்பட்டு புதியவர் ஒருவரை நியமனம் செய்வது தொடர்பாக நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருந்தோம். கடந்த வாரம் கூட இதன் அவசியத்தை சொல்லி இருந்தோம்.

இப்போது அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருகப்பதாக செய்திகள் சொல்லப்பட்டு வருகின்றது. இது விவகாரத்தில் தற்போது நமக்கு மிகுந்த அச்சமும் பயமும் ஏற்பட்டிருக்கின்றது.

காரணம் பெரியவர் சம்பந்தனை தூக்கி விட்டு அந்த இடத்துக்கு வருபவர் யார்? அவரது வேலைத் திட்டங்கள் முன்மொழிவுகள், நம்பகத் தன்மை விடயங்களில் கட்சி மிகுந்த அவதானத்துடன் தீர்மானங்களை எடுக்க வேண்டி இருக்கின்றது.

தூர நோக்குடன் செயலாற்றக் கூடிய ஒருவர் அல்லது கனதியான ஒரு சபை இந்த அமைப்புக்குத் தலைமைத்துவம் கொடுக்க வேண்டும். இது காலத்தின் அவசரத் தேவையும் கூட.

தலைவராக வருபவர் சர்வதேசத்துடனும் இந்தியாவுடனும் புலம் பெயர்ந்து வாழும் உறவுகளுடன் நெருக்கமான இருந்து  செயலாற்றக் கூடியவராக இருக்க வேண்டும் என்பது மிகவும்  முக்கியமானது.

பிந்திய தகவலின் படி அப்படி ஊடகங்களில் சொல்லப்பட்ட செய்தி தவறு என்று சுமந்திரன் கூறி இருக்கின்றார். நெருப்பிலாத புகை என்று நாமும் இதனை எடுத்துக் கொள்ளவேண்டி இருக்கின்றது

நன்றி: 25.09.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

தலைவர்கள் உல்லாசத்தில் மக்கள் பசியில்!

Next Story

உள்ளாட்சித் தேர்தல் விரைவில்!