-நஜீப்-
நன்றி ஞாயிறு தினக்குரல் 27.07.2025
செல்லாக்காசுடன் சந்தைக்கு போனவன் கதையை விரிவாக விளக்கத் தேவையில்லை. அது போலதான் பிரதான எதிர்க் கட்சி நிலை. தயாசிரிக்கு பதவி என்ற செய்தியால் சஜித் அணி ரணகளமானதை நாம் பார்த்தோம். அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் அங்கு அணிகள்.
கட்சி புனரமைப்புக் காலத்தின் கட்டாயம். அது அவசியமில்லை என்றும் வாதங்கள். அடுத்த மாதம் காட்சி சீரமைக்கப்படும். கீழ் மட்டம் முதல் உச்சம் வரை மாற்றங்கள் நடக்கும் என்று முஜீபர் கூறுகின்றார். ரிசாட் தரப்பு அமீர் அலி தாம் இருக்கும் கூட்டணி செல்லாக்காசு-பலயீனமானது என்கிறார்.
சஜீத் எதிரணிக்குத் தலைமை தாங்கினால் இன்னும் 30 வருடங்களுக்கு அவர்கள் எதிரணியில் இருப்பார்கள் என்று சொல்லும் சம்பிக ரணவக்க தாம் புதிய ஒரு கூட்டணியை விரைவில் அமைக்க போவதாக கூறுகின்றார்.!
முன்னிலை சோசலிட் புபுது இன்று நாட்டில் எதிரணி என்று ஒன்று இல்லை என்று சாடுகின்றார். ஆனால் சஜித்தை விட்டால் களத்தில் வேறு ஆளும் கிடையாது என்ற ஒரு நிலை.





