சதொச நிறுவனத்தின்  பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம்,  மீண்டும் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை குறைத்துள்ளது.  6 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நடைமுறை

சதொச நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை! பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு | Essential Ingredients Sathosa Price

இந்த விலைக்குறைப்பானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களில் இருந்தும் இந்தப் பொருட்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை

இதன்படி ஒரு கிலோ பூண்டு 60 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 490 ரூபாவாகும். முன்பு ஒரு கிலோ பூண்டு 550 ரூபாவாக இருந்தது.

சதொச நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை! பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு | Essential Ingredients Sathosa Price

ஒரு கிலோ கோதுமை மா 55 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 375 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோதுமை மாவின் புதிய விலை 320 ரூபாவாகும்.

1500 ரூபாவாக இருந்த ஒரு கிலோ வெண்டைக்காயின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1450 ரூபாய்.

315 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 285 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது .

275 ரூபாவுக்கு சதொச நிறுவனத்தினால் விற்பனை செய்யப்பட்டு வந்த வெள்ளை சீனி 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 260 ரூபாவாகும்.

சதொச நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை! பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு | Essential Ingredients Sathosa Price

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெள்ளை அரிசி 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இதன் புதிய விலை 169 ரூபாவாகும். முன்னதாக, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை அரிசி 174 ரூபாவுக்கு சதொச நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டது.

1500 ரூபாயாக இருந்த ஒரு கிலோ நெத்திலியின் விலை 50 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1450 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Story

நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமா..? அல்லது சர்வதிகார அரசில் வாழ்கிறோமா..??

Next Story

பாக்., இடைத்தேர்தலில் இம்ரான் கட்சி அமோகம்