–நஜீப்–
நன்றி 03.11.2024 ஞாயிறு தினக்குரல்
தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே எஞ்சி இருக்கின்ற இந்த நேரத்தில் இதுவரை பிரதான எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் கொழும்பை விட்டு இந்தக் குறிப்பை எழுதிக் கொண்டிருக்கின்ற நேரம் வரை வெளியே வந்து பொதுத் தேர்தல் கூட்டங்களை நடத்தவில்லை.
அவர் போட்டியில் இருந்து ஒதுங்கி விட்டாரா அல்லது தனது கட்சி வேட்பாளர்களை நீங்களே வென்று வாருங்கள் என்று கைவிட்டு விட்டாரா? குறைந்தது மாவட்டத்துக்கு ஒரு கூட்டத்தையாவது அவர் ஏற்பாடு செய்து அதில் பங்கு கொண்டு தமது வேட்பாளர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் அப்படி நடக்கவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் பரப்புரைக்காக ஒரு தனித்துவத் தலைவர் தனது முகவர் ஒருவர் ஊடக சஜித்திடம் காசு கேட்டிருக்கின்றார்.
தான் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தேர்தல் செலவுகளை சமாளித்து வருவதாகவும் சொல்லி கேட்ட காசையும் கொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது. எனவே கட்சியில் பாரிய நிதி நெருக்கடி போலத்தான் தெரிகின்றது.