சஜித் மேடையில் அதிருப்தி

-நஜீப்-

கண்டியில் அண்மையில் நடந்த சஜிதின் தேர்தல் பிரச்சார மேடையில் பல குழறுபடிகள் நடந்திருப்பதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த அரசியல் மேடையை கண்டியில் தேசிய மக்கள் சக்திக்குத் தலைமைத்துவம் கொடுக்கின்ற லக்ஸ்மன் கிரியெல்ல தன்னலத்துக்குப் பாவித்துக் கொண்டார் என்று குற்றச்சாட்டப்படுகின்றது.

வருகின்ற பொதுத் தேர்தலில் தான் தேசிய பட்டியலில் வந்து தனது மகளுக்கு கண்டி மாவட்டத்தில் அந்தக் கட்சியில் வேட்புமனுவைப் பெற்றுக் கொடுப்பதுதான் அவரது செயல்பாடுகளில் காணமுடிந்தது.

மகளை முன் ஆசனத்தில் அமர்த்தி, மாவட்டத்தில் முக்கிய பதவியல் இருப்பவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர் பின்வரிசைக்குத் தள்ளி விட்டார்.

Case Against Daughter of Lakshman Kiriella Closed as No Evidence Found

பேச்சாளர் பட்டியலிலும் மகளுக்கு இடம் கொடுத்ததுடன் மாவட்டத்தில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பலருக்கும் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் ஆளும் மொட்டுக் கட்சியில் இருந்து சஜித் அணிக்குத் தாவிய உறுப்பினர் வசந்தவுக்குக் கூட வாய்புக் கொடுக்கப்படவில்லை.

சஜித் காதுகளில் இந்த விவகாரம் எத்தி வைக்கபட்டபோதும் தேர்தல் முடியப் பார்ப்போம் என்றார் அவர்.

நன்றி: 15.09.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஹிஸ்புல்லாஹ் பெரும் நயவஞ்சகன் முனாபீக்-ஹக்கீம்!

Next Story

முஸ்லிம்கள் தலையில் கொம்பு என கருதும் நமது தலைவர்கள்