சஜித் ஆலோசகர்கள் பல்டி!

நஜீப்-

தற்போது எதிரணி தலைவராக இருக்கும் சஜித் ஆதவரலார்கள் பலர்  தற்போது ரணிலுடன் நெருக்கமாக இருப்பதும், அதற்கு எதிராக சஜித் பல நடவடிக்கைகள் எடுத்து வருவதும் தெரிந்ததே. ரணில் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்றத்தில் வந்த போதும் சஜித் ஆட்கள் பலர் அவரை ஆதரித்தும் தெரிந்ததே.

இறுதியாக சமர்ப்பிக்க பட்ட வரவு செலவு அறிக்கை ராஜபக்ஸாக்களுடையதால்ல. இது ஐதேக.வுடையது என்று அர்ஷ த சில்வா புகழ்ந்திருந்ததும் தெரிந்ததே. இன்று சஜித் தரப்பிலுள்ளவர்கள் ரணிலுக்காக ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்க அதே நேரம் டலஸ் ஆட்கள் பலர் சஜித்துக்கு விசுவாசமாக நடந்து கொண்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

இதில் வாசுவின் பெயர் கூட உச்சரிக்கப்படுகின்றது. அதே நேரம் சஜித்துக்கு மிகவும் நெருக்கமாக இருந்த திஸ்ஸ அத்தநாயக்காவை கட்சியில் அவருக்கு வரும் எதிர்ப்புகள் காரணமாக  தற்போது அவர் தள்ளி வைக்கப்பட்டிருப்பதும் தெரிய வருகின்றது.

சஜித் அணியில் எல்லாம் குழப்பமாகத்தான் இருக்கின்றது. சஜித் அணியில் இருந்து பலர் கேட்டதால்தான் நாம் ரணிலிடம் இணைவு பற்றிப் பேசினோம் என்று மீண்டும் மீண்டும் மனோ கணேசன் கூறி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி: 30.04.2023 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

சதாம் ஹுசேனின் 'குவைத் தாக்குதல் திட்டம்' அவருக்கு எதிராகவே திரும்பிய வரலாறு

Next Story

துரத்தும் போர்... துயரத்தில் சூடான் வாழ் சிரிய நாட்டு மக்கள்!