சஜித்துக்கு வரலாற்றில் மிகப் பெரும் நெருக்கடி.

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் தனக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து வருகின்ற காலங்களில் சஜித் ஒரு தீர்மானத்துடன் இருக்கின்றார். ஆனாலும் இந்த உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து அவர் மிகப் பெரிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றார்.

அவரது சகாக்கள் மற்றும் ரணிலுக்கு விசுவாசமானவர்கள் இந்த நேரத்தை பாவித்து சபைகளில் கூட்டணி அமைத்து சபைகளைக் கைப்பற்ற இப்போது பலமான அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றார்கள்.

குறிப்பாக கொழும்பு உட்பட இன்னும் பல இடங்களில் இந்த முயற்சி நடக்கின்றது. இதில் அவர் எப்படி தப்பிப் பிழைப்பது என்று சஜித்துக்கு பெரும் சிக்கல். கூட்டணி அமைக்காது போனால் கடும் விமர்சனம் வரும்.

கூட்டணிக்குப் போய் மூக்குடை பட வேண்டி இருக்கும் என்பது அவரது நிலைப்பாடாக இருக்கின்றது. தனது மிகப் பெரிய அரசியல் எதிரியாக ரணிலையே இவர் கருதுகின்றார்.

அத்துடன் ரணில் நாமல் திலித் போன்றுவர்களுடன் எப்படி கூட்டணி போடுவது என்று தம்மிடம் தூது வருபவர்களிடம் அவர் கேள்வி எழுப்பி வருகின்றார்.

Previous Story

நிபந்தனையுடன் கூடிய கூட்டணிக்கு தயார் டில்வின்

Next Story

தேர்தல் முடிவுகளும் உள்ளாட்சி அதிகாரமும் நடந்தது என்ன?