கோவணத்துடன் கொழும்பில் ஓட்டம்!

-நஜீப்-

நாட்டில் பிரதான எதிரணியாக தன்னைக் கூறிக் கொள்கின்ற சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னரே பல இடங்களில் ராஜபக்ஸாவின் மொட்டுக் கட்சியுடன் கூட்டணி சமைத்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது.

குருனாகலை நகர சபைக்கு புதிய நகராதிபதியைத் தெரிவு செய்யும் போது சஜித் அணிக்கு மேயர் பதவியும் மொட்டு அணிக்கு பிரதி மேயர் பதவியையும் அவர்கள் பகிர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதனால் தற்போது அரசியல் நிலவரப்படி தேர்தல் நடக்குமாக இருந்தால் பிரதான போட்டி திசைகாட்டி அணுரா அணிக்கும் தொலைபேசி சஜித் அணிக்கும் இடையில்தான் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

அப்படியாக இருந்தால் 2023 மார்ச்சில் 9ல் உள்ளூராட்சித் தேர்தல் நடக்குமாக இருந்தால் முடிவுகளின் பின்னர் ரணில் ராஜபக்ஸா சஜீத் எல்லோரும் ஒரே குடித்தனம் என்பது இப்போதே உறுதி. கூட்டுறவு சபைத் தேர்தலிலும் அவர்கள் கூட்டணி போட்டிருக்கின்றார்கள்.

இதற்கிடையில் வரும் தேர்தலில் மொட்டு அணியை விட ஜேவிபி. ஒரு வாக்கையேனும் அதிகமாக எடுக்குமாக இருந்தால் தான் காலிமுகத்திடல் தெருவில் கோவணத்துடன் ஓடுவேன் என்று புத்தளம் சனத் நிசந்த பந்தயம் கட்டி இருக்கின்றார்.

நன்றி: 12.02.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மொட்டு, யானை கள்ள கூட்டணிக்கு மன்னிப்பே கிடையாது! - எதிர்கட்சித் தலைவர்

Next Story

துருக்கி, சிரியா:நிலநடுக்கம்.. குவியல் குவியலாக சடலங்கள்..