கோமாவில் இருந்து மீண்ட ஹக்கீம் மூக்குடைபடுகிறார்!

ஹக்கீம் அணுரகுமராவின் பேச்சை திரிவுபடுத்தி முஸ்லிம்கள் மத்தியில் அணுராவுக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசியல் பரப்புரை பேச்சுக்களை செய்தார் என்பதால் அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஒரு புறம் இருக்க.

அன்று நாடாளுமன்றத்தில் அணுர அப்படிப் பேசி இருந்தால் மு.கா. ஹக்கீம் அப்போது கேள்வி எழுப்பாதிருந்தது ஏன்.? கோமாவில் இருந்தாரா?

இது அரசியலில் சமூகத்தை விற்றுப் பிழைக்கின்ற காலம் என்பதால் மனிதன் ஐந்து வருடங்களுக்குப் பின்னர் இன்று கோமாவில் இருந்து டீல் வேலைகளுக்காக மீண்டிருக்கின்றார் போலும்.

19க்கு கைதூக்குமாறு ஓடர் தந்தது தலைவர்தான். அதனால்தான் ஒழுக்காற்று மன்னிப்பாகியது என்ற விமர்சனங்கள் தலைவருக்கு. இப்படியான முரண்பாடுகளினால்தான் கட்சிக்குள்ளேயும் வெளியேயும் தலைவர் ஹக்கீம இப்போது தொடர்ச்சியாக மூக்குடைபட்டு வருகின்றார்.

Previous Story

ஜனாதிபதித் தேர்தல் புதிய கள நிலவரம்!

Next Story

2024 ஜனாதிபதித் தேர்தல் தேர்தல்களின் தாய் அல்லது புள்ளடிப் புரட்சி!