கோட்டாபயவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாலைதீவு ஜனாதிபதி இல்லத்தை முற்றுகை

புதிய இணைப்பு

மாலைதீவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கையர்களை கைது செய்யும் நடவடிக்கையை மாலைதீவு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

முதல் இணைப்பு

மாலைதீவில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாலைதீவில் உள்ள மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் சோலியின் வீட்டிற்கு அருகில் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனாதிபதியை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதிகாலை இலங்கையிலிருந்து விமானப்படை விமானம் மூலம் மாலைதீவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதியும் அவரது மனைவியும் செல்வதற்கு விமானம் வழங்கியதாக விமானப்படை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

Previous Story

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் உயிரிழப்பு

Next Story

ரணில் பிறப்பித்த உத்தரவால் சர்ச்சை - ஹிஜாஸ் ஹிஸ்புல்லா