/

கூட்டமைப்பை சிதைக்கும் நோக்கம் -இரா. சம்பந்தன் பதில்

07.07.2022

“தமிழ் மக்கள் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழும் நிலை ஏற்பட வேண்டும். அந்த நிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தாவிடினும் சர்வதேச சமூகம் ஏற்படுத்தியே தீரும். அந்த நம்பிக்கை இன்னமும் வீண்போகவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

கூட்டமைப்பை சிதைக்கும் நோக்கில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்

“தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இந்நிலையில், கூட்டமைப்பைச் சிதைக்கும் நோக்குடன் விமர்சனங்கள் முன்வைக்கப்படலாம்.

கூட்டமைப்பை சிதைக்கும் நோக்கில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்!இரா. சம்பந்தன் | Criticisms Leveled Against Confederacy Sambandhan

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தீர்மானத்தின்படி கூட்டமைப்பின் தலைவராக நானே தொடர்ந்தும் பதவி வகிக்கின்றேன். கூட்டமைப்புக்குள் இருப்பவர்கள் எவரும் தலைவர் பதவியை சவாலுக்குட்படுத்தி கருத்துக்கள் எதனையும் முன்வைக்கவில்லை.

எனது உடல் நிலையில் சிறிய தாக்கம் ஏற்பட்டாலும் நான் இன்னமும் தைரியத்துடன்தான் இருக்கின்றேன். தமிழ் மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நான் அவதானித்துக்கொண்டுதான் இருக்கின்றேன். அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயங்கள் விடயங்கள் தொடர்பில் உள்நாட்டு, வெளிநாட்டு முக்கியஸ்தர்களுடன் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் பேச்சும் நடத்தி வருகின்றேன் என்றார்.TW

‘வாய்ப்பு’

காட்டுத் தீ-3

யூசுப் என் யூனுஸ்

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற வார்த்தை அனைவரும் அறிந்ததே. அந்த வாய்ப்புப் பற்றித்தான் இன்று பேசப் போகின்றோம். அல்லது அதனை தவறவிட்டதாற்கான குற்றப்பதிவை இங்கு முன்வைக்கப் போகின்றோம். வாய்ப்பு எப்போதும் சமயமாட்டாது என்பதும் தெரிந்ததே.

சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் பற்றிப் பேசுகின்ற போது வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்கின்ற தமிழ் சமூகத்தினர். முஸ்லிம்கள் என்று பார்க்கின்றபோது அவர்கள் தீவில் பரந்து வாழ்ந்தாலும் பொதுவாக கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்கள். மலையகத்தில் வாழ்கின்ற இந்திய சமூகத்தினர் என்றுதான் பார்க்க வேண்டும்.

இன்று தமிழ் மக்களுக்கு எஸ்.ஜே.வி. செல்வநாயகமோ, ஜீ.ஜீ. பொன்னம்பலமோ, அப்பக் குட்டி அமிர்தலிங்கமோ இல்லை. முஸ்லிம்களைப் பொறுத்த வரை நமது பார்வையில் டாக்டர் பதியுத்தீனோ. ஒரு அஷ்ரஃபோ சமகால அரசியலில் இல்லை. சௌம்மிய மூர்த்தி தொண்டாவுக்குப் பின் அங்கும் தலைமைகள் பெட்டிக் கடைகள் நிலைக்கு வந்திருக்கின்றது.

கிருஸ்துவ சமூகம் நாட்டில் ஒரு சிறுபான்மைக் குழுவாக இருந்தாலும், தெற்கு சிங்களக் கிருஸ்தவர்கள் பேரித்துடனும், வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற தமிழ் பேசுகின்ற கிருஷ்தவர்கள் அங்குள்ள பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்தே தீர்மானங்கள் எடுக்கின்றார்கள்.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் சிங்களம் பேசுகின்ற கிருஸ்தவர்களிடத்தில் ஒரு தனித்துவப் போக்கு வளர்ந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. எனவேதான் அவர்கள் அரசு மீது இதுவரை தமக்கிருந்த நம்பிக்கையை இழந்து சர்வதேத்திடம் நீதி கேட்டுப் போக வந்தது.

ஈழத் தமிழர்கள் உரிமைப் போரட்டங்களின் போது சிங்களம் பேசுகின்ற கிருஸ்தவர்களுக்கும் தமிழ் பேசுகின்ற கிருஸ்தவர்களுக்குமிடையே முரண்பாடான உணர்வுகளே இருந்து வந்திருக்கின்றன.

சமூக உரிமைகளை அடைவதில் நாம் முன்பு சொன்ன தலைவர்கள்  தேர்தல் காலங்களை அருவடை காலமாக அல்லது பயிர்கள் பட்டுப் போகின்ற காலங்களாகவும் சமைத்துக் கொண்டார்கள். வடக்குக் கிழக்கு உணர்வுகள் சுதந்திரத்தின் பின்னர் தனித்துவம் நோக்கி நகர்ந்தது.

சுதந்திரம் பெரும்வரை இருந்த இணக்கப்பாடுகள் பின்பு முரண்பாடுகளை நோக்கி பயணித்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் பேரினத்து அரசியல் தலைமைகள் ஆக்கிரமிப்புப் பணியில் தீர்மானங்களை எடுத்தனர். ஐயா செல்வா, முதல் அமீர்தலிங்கம் வரையிலான தலைமைத்துவங்கள் ஆளுமையும் கவர்ச்சியும் மிக்கதாக இருந்ததால் அவர்கள் அணி அன்று கனதியாகத் தெரிந்தது.

அதன் பின்னர் ஆயுதக் குழுக்கள் தமிழ் மக்கள் உரிமைகளைத் துப்பாக்கியில்தான் பெறமுடியும் என்று நம்பியது. அதில் ஒரு யதார்த்தமும் இருந்தது என்பதனை மறுப்பதற்க்கில்லை. நாம் முன்பு சொன்ன ஆளுமை மிக்க தலைமைத் துவங்களினாலே தாக்குப்பிடிக்க முடியாத நிலை. எனவேதான் ஆயுதப்போர் வந்தது.

இந்த நாட்டில் தமிழர்களின் உரிமைகள் பற்றி சர்வதேச சமூகத்தின் காவனத்தை ஆயுதப் போராட்டமே ஈர்த்தது என்பதனை எவரும் மறுக்க முடியாது மறுக்கவும் மாட்டார்கள். ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்கலுக்குள் செருகிப் போகும் வரை வேலுப்பிள்ளைப் பிரபாகாரன்தான் ஈழத் தமிழர்களின் மட்டுமல்ல சர்வதேச தமிழ் சமூகத்த்தின் நட்சத்திரமாக தெரிந்தது.

ஆயுத கலாச்சாரத்தில் நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் அது வரலாறுகள் படைத்த உதாரணங்கள் உலகில் நிறையவே இருக்கின்றன. அண்மையில் யாழில் கூட்டம் போட்ட அணுர குமார கூட அயுதம் தூக்க வேண்டி வந்த பின்னணியை பகிரங்கமாக சொல்லி இருந்தார்.

விடுதலைப் போர் முள்ளிவாய்க்காலுக்குல் முடங்க கூட்டணி மீது விரும்பியோ விருப்பாமலோ ஈழத் தமிழர் நம்பிக்கை கொள்ள வேண்டி வந்தது. அந்தத் தலைமைத்துவமும் கூட்டும் ஏறக்குறைய இன்றுவரை நீடிக்கின்றது.

ஐயா சம்பந்தன் அவருடன் எமக்கு நட்பும் கிடையாது பகைமையும் கிடையாது. அவரது அரசியல் முதிர்ச்சி பற்றியும் எமக்கு சந்தேகமும் இல்லை. ஆனால் சமகால அரசியல் களத்தில் அவர் ஒரு நல்ல துடுப்பாட்டக்காராக இல்லை. உடல் ரீதியாகவும் இனி அவரால் சாதிக்க முடியாது. அது இயற்கை நியதி.

தமிழ் மக்கள் உரிமைகள் விடயத்தில் மாற்றான் போலி வாக்குறுதிகளை நம்பி  அவரும் ஏமாந்து அவர் சார்ந்த சமூகத்தையும் இதுவரை ஏமாற்றித்தான் வந்திருக்கின்றார் என்பது கசப்பான உண்மை. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் விடயத்தில் சட்டம் தெரிந்த சுமந்திரனை எவ்வளவு தூரம் நம்பலாம் என்பதில் எமக்கு நிறையவே குழப்பங்கள் இருக்கின்றன.

முதிர்ச்சியில்தான் அனுபவமும் ஆளுமையும் வருகின்றது என்று கருத்தில் நமக்கு பெரியளவில் நம்பிக்கை இல்லை. துடிப்பு மிக்க இளவயதுக்காரர்களிடத்தில் அனுபவமும் ஆளுமையும் வரலாம்-இருக்கலாம்.

அப்படிப்பட்ட எத்தனையோ பேரை நாம் பார்த்திருக்கின்றோம். அதற்காக இங்கு சணக்கியனை அந்த இடத்தில் வைத்துக் கணக்குச் சொல்ல வருகின்றோம் என்றும் எவரும் தப்பாக எண்ணிவிடக் கூடாது. பிளவு பட்டிருக்கின்ற தமிழ் தரப்புக்கு நமது சிபார்சு அதுவல்ல.

இலங்கையின் தற்போதய அரசியல் நெருக்கடியை எண்ணிப் பாருங்கள். இப்படி ஒரு நிலை வரப்போகின்றது என்பதனை நாங்கள் முதிச்சி ஆளும் என்று சொல்கின்ற தலைமைகள் முன்கூட்டியே தெரிந்த வைத்திருக்க வேண்டும்.

இந்தியா இல்லை என்றால் சாவுதான் என்று கடந்த சில மாதங்கள் இருந்தது. இன்றும் அதில் மாற்றங்கள் இல்லை. இந்த நேரத்தில் தமிழ் தலைவர்கள் அதற்கான வியூகங்களை பாவித்திருக்க வேண்டும்-பேரம்பேசும் விடயத்தில் ஆதிக்கம் செலுத்தி இருக்க வேண்டும். இந்தியா ஊடாக அழுத்தங்களைக் கொடுத்திருக்க முடியும்.

ஈழத் தமிழர்கள் மேடியைப் பெரிதும் நம்பி இருந்தார்கள் ஒரு முதலமைச்சராக இருந்து எம்.ஜீ.ஆர் பார்த்த வேலையைக் கூட நெருக்கடி நேரங்களில் மோடி தமிழருக்குச் செய்யவில்லை. அவர் இலங்கை விவகாரத்தில் பிராந்திய நலன்களை மட்டுமே பார்க்கின்றார். இதனைத் தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இன்றுவரை அவர்கள் கோட்டை விட்டு வருகின்றார்கள்.

குறைந்தது நில ஆக்கிரமிப்பை தடுத்தல்,  மாகாணசபைத் தேர்தலை நடத்துவது என்ற சின்ன விடயங்களை அதுவும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள சரத்துக்களையாவது இந்த நேரத்தில் உயிர்ப்பித்திருக்கலாம். அது கூட நடக்கவில்லை.

தெற்கு அரசியலில் இவர்கள் வேடிக்கை பார்ப்பது போலவே ஈழத் தமிழர் விவகாரங்களில் இவர்கள் இன்று வேடிக்கை பார்த்து வருகின்றார்கள். போருக்குப் பின்னர் இவர்கள் அடைவுகள்தான் என்ன?

மேலும்  வடக்குக் கிழக்கில் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் இருக்கின்ற முரண்பாடுகளைத் தீர்க்க  திறந்த மனதுடன் இரு சமூகத்தினருடனும்  கருத்தப்பறி மாற்றங்களை செய்து இரு சமூகங்களும் புரிந்துணர்வுடன் தமக்குள் இருக்கும் பிரச்சினைகளைப் பேசி சில நகர்வுகளைப் பரீட்சித்திருக்கலாம். இன்றுவரை  இப்படி ஒரு முயற்ச்சியை இரு சமூகங்களும் பரந்த அளவில் மேற்கொள்ளவில்லை.

இனப்பிரச்சினைக்கு தீர்வு விடயத்தில் இவற்றை பேரினம் ஆப்பாகப் பாவிக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது. அதனைமுன் கூட்டியே களைய வேண்டியது இரு சமூகங்களுக்கும் ஆரோக்கியமாக இருக்கும்.

அவ்வப்போது ஹக்கீம் போன்றவர்களுடனான சந்தர்ப்பவாத அரசியல் சந்திப்புகளை நடாத்தி இருதரப்பு பேச்சுவார்த்தை என்று அதற்கு நாமம் சூட்டுவது ஏமாற்று நாடகம். அதில் ஏதாவது ஒரு அங்குள நகர்வாவது இதுவரை நடந்திருக்கின்றதா?

செல்வா, அமிர், தொண்டா, அஷ்ரஃப் போன்றவர்களுக்குப் பின் இந்த மூன்று சமூகங்களும் சிற்றரசர்கள் குறுநிலங்களை ஆள்வதைப் போல்தான் பிளவு அரசியலை செய்து கொண்டிருக்கின்றன. தமது சமூகங்களின் பிரச்சனைகள் பொதுவானது.

இன்று மூன்று சமூகத்தலைமைகளும் பலயீனப்பட்டிருப்பதால், பொதுவான சமூக பிரச்சினைகளை அவர்கள் தமக்குள் விவாதித்து அவற்றை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின்னர் அவற்றை வென்றெடுப்பதற்கு அரசியல் சிவில் சமூகங்கள் ஒன்றிணைந்து தமக்குள் ஒரு அதிகார சபையை உருவாக்கி காய் நகர்த்தினால் அதற்கு சர்வதேச அங்கிகாரமும் உள்நாட்டில் அரசியல் பலமும் வரும். அப்போது அருவடை அதிகமாக இருக்கும் என்பது நமது கருத்து.

ஒரு காலத்தில்  பலஸ்தீனில் இப்படி ஒரு அமைப்பு இருந்தது தெரிந்ததே. இது விவகாரத்தில்  விவாதிக்க வேண்டிய விடயங்கள் நிறையவே இருந்தாலும் ஒரு சிந்தனைக்கு மட்டும் அறிமுகத்தை இங்கு பதிந்திருக்கின்றோம் அவ்வளவுதான்.

 நன்றி:03.07.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

முஸ்லிம்கள் பற்றிய நாடகத்தை பாதியில் நிறுத்திய  உறுப்பனார்கள் :ஏன்?

Next Story

இசைஞானி இளையராஜாவுக்கு எம்.பி பதவி!