குழந்தையை கரடி குழியில் வீசிய தாய்.!

காரணத்தை கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க.!

தாஷ்கண்ட்: இந்த நவீன உலகில் ஒரு சில மனிதர்களின் மனம் மரத்து போய் விடுகிறது. பெற்ற தாய், தந்தையை கொடுமைப்படுத்திய மகன்கள், குழந்தையை சித்ரவதை செய்த தாய் என்ற சம்பவங்களை அவ்வப்போது நாம் பார்த்திருக்கலாம்.இந்த வரிசையில் கொடூர தாய் ஒருவர் செய்த செயலைபற்றிதான் இப்போது பார்க்க போகிறோம்.

பெற்ற குழந்தையை கரடி குழியில் தூக்கி வீசிய தாய்.. காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.. பகீர் வீடியோ!

அதாவது உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள தாஷ்கண்டில் மிருகக்காட்சிசாலை ஒன்று உள்ளது. இங்கு ஒரு பெண் தனது 3 வயது மகளை கரடி குழியில் தூக்கி எறியும் பகீர் வீடியோ வெளியாகியுள்ளது.

“கரடி”=”தாய்”

சுமார் 16 அடிக்கு கீழே உள்ள அகழியில் அதில் ‘ஜுஸு’ என்ற பழுப்பு நிற கரடி உள்ளது. மிருகக்காட்சிசாலைக்கு 3 வயது மகளுடன் வந்த பெண், திடீரென தனது குழந்தையை கரடி குழியில் தூக்கி வீசினார். அங்கு கூடி இருந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். குழந்தை குழிக்குள் விழுந்தவுடன் கரடி உடனடியாக குழந்தையை மோப்பம் பிடித்தது.

காப்பாற்றிய ஊழியர்கள்

அங்கு இருந்த மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் உடனடியாக சென்று குழந்தையை மீட்டனர். நல்லவேளையாக குழந்தையை கரடி தாக்கவில்லை. அதே வேளையில் கீழே விழுந்த வேகத்தில் குழந்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டன. ஊழியர்கள் அந்த பெண்ணை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பெற்ற மகளையே கொல்ல முயன்றது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ஏன் இப்படி செய்தார்?

ஆனாலும் அந்த பெண்ணை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 30 வயதான அந்த பெண் ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ளதாக கூறப்படுகிறது. தனது கணவர் வேலையை விட்டதால் அவர் ரஷ்யாவில் வேலைக்குச் சென்றதாகவும், இதனால் மிகுந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக இவ்வாறு நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவர் தற்போது தனது இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது வயதான தந்தையுடன் வசித்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பகீர் வீடியோ

அந்த பெண் தனது குழந்தையை கரடி குழிக்குள் தூக்கி எறியும் காட்சிகளும், குழந்தையை ஊழியர்கள் காப்பாற்றும் வீடியோவும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் கொடூர மனம் கொண்ட அந்த பெண்ணுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Previous Story

மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல் ; பாதுகாப்பு அமைச்சர் விடுத்த பணிப்புரை

Next Story

உத்தர பிரதேச தேர்தல்