குழந்தைகளை பிரிக்க இன்று அறுவை சிகிச்சை

வங்க தேசத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை தனித்தனியாக பிரித்தெடுக்க 10 மணி நேர தொடர் அறுவை சிகிச்சை இன்று மேற்கொள்ளப்படுகிறது. நம் அண்டை நாடான வங்க தேசத்தின் டாக்கா நகரில் வசிக்கும்லால்மியா மோனுபா தம்பதிக்கு 2019ல் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.

 

இரு குழந்தைகளும் ஒட்டிப் பிறந்திருந்தன. இருவருக்கும் முதுகுத் தண்டு, குடல் பகுதிகள் இணைந்து இருந்தன. அந்தக் குழந்தைகளுக்கு லாபியா, லாமிஷா என்று பெயரிட்டுள்ளனர். பிறந்த ஒன்பது மாதங்களில் இருவருக்கும் குடல் பகுதி தனித்தனியாக பிரிக்கப்பட்டு விட்டது.

இதர உறுப்புகளையும் அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளை தனித்தனியாக பிரிப்பதற்கு இன்று டாக்கா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. மாரத்தான் எனப்படும் இந்த தொடர் அறுவைச் சிகிச்சையில் 35 டாக்டர்கள், 10 மணி நேரம் சிகிச்சை அளிக்கவுள்ளனர்.

Previous Story

ஆம் ஆத்மி: பஞ்சாப்பில் ஆட்சி!

Next Story

2 இலங்கையர்கள் அமெரிக்கா நுழைய தடை!