குற்றவாளிகள் போய்விட்டார்கள்!

-நஜீப்-

ஆளும்தரப்பிலிருந்து 13 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தியோகபூர்வமாக வெளியேறி எதிர்க்கட்சியில் அமர்ந்து விட்டனர். இது தொடர்பாக மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகல காரியவாசம் தெரிவித்த கருத்து இது. சில தினங்களுக்கு முன்னர் இந்த அரசாங்கத்தை நெருக்கடிகளுக்கு ஆளாக்கியவர்கள் தற்போது கட்சியிலிருந்து வெளியேறி விட்டார்கள்.

இளைஞர்களின் போராட்டங்களுக்கும் இவர்கள் நடவடிக்கைகள்தான் காரணமாக அமைந்திருந்தது என்றும் அவர் வேறு குற்றம் சாட்டுகின்றார். மேலும் விரைவில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்து நாம் வெற்றிகரமான ஆட்சியொன்றை இப்போது முன்னெடுப்போம் என்றும் தெரிவித்திருக்கின்றார் காரியவாசம்.

இந்தக் கதையைப் பார்க்கின்ற போது தவறுகள் எல்லாம் சரி செய்யப்பட்டு விட்டது. அல்லது அப்படி செய்தவர்கள் எல்லாம் வெளியேறிவிட்டார்கள். புனிதமானவர்கள்தான் இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றார்கள் என்பதாகத்தான் அவர் கதை அமைந்திருக்கின்றது.

இப்படியான கதைகள் மூலம் நாம் இந்த நாட்டில் அரசியல் எப்படி முன்னெடுக்கப்பட இருக்கின்றது என்பதனைப் புரிந்து கொள்ள முடிகின்றது. மீட்சிக்கான வாய்ப்பே கிடையாது.!

நன்றி: 04.09.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

 அரசியல்வாதிகளால் ஆபத்தான நிலையில் நாடு

Next Story

கனடா: கத்திக்குத்து: 10 பேர் பலி