குர் ஆன் விவகாரமும் அரசும்!

நஜீப்

(நன்றி 16.11.2025 ஞாயிறு தினக்குரல்)

குர்ஆன் என்றாலே முஸ்லிம்கள் மெய்சிலிர்த்துப்போவார்கள். இதனால் குர்ஆனை இம்சைப்படுத்தி சிலர் முஸ்லிம்களை வம்புக்கிழுக்கின்றார்கள். அனுர அரசு குர்ஆனைத் தடை செய்திருக்கின்றது என்ற ஒரு இசுவை சிலர் முன்னெடுக்கின்றார்கள்.

ஒரு தனிநபர் சவூதியில் இருந்து இருபத்தி ஐயாயிரம் (தமிழாக்கம்-25000) பிரதிகளை திணைக்கள முகவரிக்கு அனுப்பி இருந்தார். இது உரிய ஒழுங்கு விதிகளின்படி அனுப்பாததால் அவற்றை வெளியே கொண்டுவருதில் சட்டச் சிக்கல். இதற்கும் அரசுக்கும் தொடர்பு கிடையாது.

Dawateislami India

இதற்கு மத்தியில் முறைப்படி வந்த இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட குர்ஆன் பிரதிகளும் மதரசா நூல்களும் முறையாக பொறுப்பேற்கப்பட்டு விநியோகிப்பட்டிருக்கின்றன. இதனை ஜாமியதுல் உலமா செயலாளர் நூர் ஆமிதே கூறுகின்றார்.

ஒரு செய்தியை ஊடகங்களும் நயவஞ்சகர்களும் எந்தளவுக்கு திரிவுபடுத்தலாம் என்பதற்கு இது நல்ல உதாரணம். ஆளும் தரப்பில் இருக்கும் முஸ்லிம்கள் எவரும் இது பற்றிய விளக்கத்தை முறையாக சமூகத்துக்கு கொடுக்காத குறையும் இங்கு இருக்கின்றது.!

Previous Story

பிகாரில் பாஜக  வெற்றி 

Next Story

 வெடித்து சிதறிய வெடிபொருட்கள்.. 9 பேர் பலி..