குரல் தரும் குறுஞ் செய்திகள்

நஜீப்

நன்றி: 24.05.2026 ஞாயிறு தினக்குரல்  

1.பசில் ராஜபக்ஸ மீது பல வழக்குகள். அதில் ஒன்று+1 தொடர்பில் நீதி மன்றம் பிடியாணை. அதனால் அமெரிக்காவில் தனது இருப்பிடத்திலிருந்து பசில் தலைமறைவாம்.

2.நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியிலிருந்து மீள்வதாக இருந்தால் ஜனாதிபதி ரணிலைப் பிரதமராக்க வேண்டும் என ஜன ஜய கட்சி தலைவர் பிரதீப் கருத்து.

3.பௌத்த தேரர்களின் குற்றச் செயல்களை விசாரிக்க அவர்களுக்கு தனியான ஒரு நீதி மன்றம் அமைப்பது பற்றிய ஒரு கருத்து இப்போது உச்சரிக்கப்படுகின்றது.

4.பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்க மீண்டும் ஒரு அரசியல் கட்சியைத் துவங்க இருப்பதாகவும் அதற்கான அமைப்பாளர்களை தற்போது தேடி வருவதாகவும் தகவல்.

5.ரணில் இதன் பின்னர் ஒரு போதும் செயல்பாட்டு அரசியலுக்கு வரமாட்டார் என உறுதியாகத் தெரிவிக்கின்றார் அவரது சகாக்களில் ஒருவரான ரவி கருனாநாயக.

6.சிறுவனை பாலியல் வட்புணர்வுக்கு ஆளாக்கிய தபுத்தேகம தேரருக்கு(வயது-65) அனுராதபுரம் நீதிபதி சதுன் விதாரனகே முப்பது வருடம் சிறை தண்டனை வழங்கி அதிரடி.

7.டிக்கோயா இரட்டைக் கொலை சந்தேக நபர் தப்பி ஒடிய போது மீண்டும் கைது என வரும் செய்திகள் தவறு. அவர் இன்னும் கைதாகவில்லை என்கிறது பொலிஸ்.

Previous Story

කපිලගේ නීතීඥයින් මරණ පරීක්ෂණයට කැඳවීම ප්‍රශ්නයක් වෙයි | මහේස්ත්‍රාත් තීන්දුවක් ගනී |

Next Story

கிளிப்பிள்ளைகள் உளறுவதேன்!