குரல் தரும் குறுஞ் செய்திகள்.

நஜீப்

நன்றி: 17.05.2026 ஞாயிறு தினக்குரல்

1.நீதிமன்றங்களைச் சுற்றி பினையில் ஆட்களை விடுவிக்கும் கூலிப் படைகள் நிற்பதாகவும் அவர்கள் மூலம்தான் சர்ச்சைக்குரிய ஏயர்பஸ் குற்றவாளி கபிலவும் வெளியே வந்தாராம்.!

2.வரும் வரவு செலவுத் திட்டத்திலும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு. சொன்னபடி சில ஓய்வூதிய அதிகரிப்புகள் எல்லாம் கிடைக்கும்.-அமைச்சர் லால் காந்த

3.சட்டசபைக்கு வேட்டி கட்டித்தான் விஜய் வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து. ஆனால் ஆள் சர்ச்சைக்குரிய இடத்திலிருந்து வந்த கட்டளையால் கோட்டும் சூட்டுமாக வந்தாராம்!

Ex‑SriLankan Airlines CEO Claims Rs. 60 Mn Paid to Mahinda Rajapaksa in Airbus Deal

4.எயார்பஸ் கொள்வனவு மோசடிதொடர்பில் இதுவரை ஐந்து சாட்சிகள் மர்மமான முறையில் மரணமாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.!

5.தேர்தலுடன் செங்குத்தாக பிளந்த அதிமுகவில் இன்று தெருச் சண்டை என்ற நிலை. கட்சிக்குள் வெட்டுக் கொத்து. இதனால் அதிமுக.வில் பூகம்பமாக வெடிப்பு.!

6.தமிழகத் தேர்தலில் தி.நகர் வாக்குச் சாடியில் இலங்கையர் ஒருவர் கள்ளவாக்குப் போட்டு கைது. தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்றவரும் இருக்கின்றார்.!

7.அரிசி வேகும் பானையை அகப்பையால் லாவகமாக சுழற்ற வேண்டும். வெறும் பானையை எப்போதும் எப்படியும் சுழற்றலாம். அரசு-எதிரணி பற்றி உறுப்பினர்ரா ஜேந்திரன்.!

Previous Story

සැකකාර භික්ෂුවට එරෙහිව ප්‍රබල සාක්ෂියක් අධිකරණයට! තවත් දැරියක් අනාරක්ෂිත තත්වයක

Next Story

යෝෂිතගේ නඩුවේදී වෙච්චි දෙයක්..!