குரல் தரும் குறுஞ்செய்திகள்!

நஜீப்

நன்றி 07.12.2025 ஞாயிறு தினக்குரல்

1.மனித நேயம்:பேராதனையில் ஒரு முஸ்லிம் குடும்பத்தை மீட்கப்;போய் டசன் கணக்கில் பலியான தமிழர்களும் சிங்களவர்களும்!

2.ஜேவிபி. செயலாளர் டில்வின் இந்திய விஜயம் இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் தீர்க்கமானதாக அமையலாம்.!

3.வரவு செலவு ஒதுக்கீட்டில் முதல் முறையாக கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம். இது 2.04 சதவீதம்.!

4.ஈஸ்டர் படுகொலைக்கு வழக்குப் போல இந்தப் பேரழிவுக்கு அரசே பொறுப்பு. அதற்காக வழக்குத்தாக்கலாம்.-மரிக்கார்.எ.பீ.

5.ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது காலை முதல் மாலைவரை துரிதமாக தினந்தோறும் நடந்து வருகின்றது.!

6.நுகேகொட பேரணிக்குப் பின் ஐதேக.வில் இருக்கும் பலர் தனிப்பட்ட ரீதியில் சஜித் அணியுடன் இணையப் பேசிவருகின்றார்களாம்!

7.பேரழிவுக்கு அதிகாரிகளை விமர்சிப்பது தவறு என்று சஜித் கூற அவரது சகாக்கள் கருத்து அதற்கு நேர்மாற்றமாக உள்ளது.!

Previous Story

සහනාධාර වංචා කරලා.රනිල්,ගෝඨා, චන්ද්‍රිකාගේ වැඩත් එළියට.

Next Story

ප්‍රකෝටිපති ව්‍යාපාරික රටම දන්න හඳුනන 88-89 JVP කරපු වාසනා බේකස් අධිපතිමෙන්න වැඩ කරන හොරේ