குரல் தரும் குறுஞ்செய்திகள்

நஜீப்

நன்றி: 05.07.2026 ஞாயிறு தினக்குரல் 

1.டுபாய் கப்பம்: இது இப்போது இடியாப்பச் சிக்கலாகி வருகின்றது. விஜேதாச மகன் சஜித்தின் அமைப்பாளர் அடுத்து மைத்திரி மகன் தகம் நாமமும் ஓரிடத்தில் அடிபடுகிறதாம்.!

2.ட்ரம்ப் ஈரானுடன் மட்டுமல்லாது தனது நீதி மன்றத்துடனும் இன்று மோதி வருகின்ற நிலை. அவருக்கு எதிராக பல தீர்ப்புக்கள் சங்கிலித் தொடராக வந்த கொண்டிருக்கின்றன.!

3.இலங்கைக்கு எதிரான ஒரு சர்வதேச உளவு அமைப்பில் சலே பணியற்றுவதாக வீரவன்ச அன்று சாட்டி இருந்தார். அதே சலேக்காக விமல் களத்துக்கு வந்தது எப்படி.!

4.மனிதர்களைக் கொல்லவும் கொல்லாமல் வாழ விடுவதற்கும் அரசியல்வாதிகளும் அவர்கள் உறவுகளும் கப்பம் வாங்கும் உலகில் ஒரே நாடு இலங்கை. என்ன சாதனை!

5.ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர் சலேக்கு விசேட சலுகைகள் வழங்க முடியாது. அவரும் ஒரு சராசரி சந்தேக நபர் மட்டுமே என சலே கோரிக்கைகளை நீதிபதி நிராகரித்தார்.

6.எல்ரீரீ.தமிழ்ச் செல்வன் கொல்லப்பட சலேதான் முக்கிய காரணம் என கோடா சட்டத்தரணி அலி சப்ரி சான்றிதழ் கொடுக்க அலி கூறுவது பொய் -பீல்ட்மார்ஷல் அதிரடி.!

7.சகித விஜேதாச நீதி மன்றம் வரும் போது அவருக்காக 150க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராம். பணம் பாதாளம் வரை என்றால் கப்பக் காசு அதை விட ஆழம் பாயும்!

Previous Story

"சவுதி அரேபியாவை இனி சும்மா விடமாட்டோம்"

Next Story

බ්‍රිතාන්‍යයෙන් වෙන්වීම ඇමෙරිකාව බිහි වීමට හේතු වූයේ කෙසේ ද?