நஜீப்
நன்றி: 24.05.2026 ஞாயிறு தினக்குரல்
1.ஜனாதிபதி அனுரகுமார போர் வெற்றி நினைவு உரையில் குற்றவாளிகளுக்கு தண்டனை இனவாதத்துக்கு நாட்டில் இடமில்லை என்பதை அடித்துக் கூறி இருக்கிறார்.
2.தற்போது இலங்கை ரூபாவுக்கான விற்பனை விலை 353.03 கொள்வனவு விலை 342.63 என்று இருக்கின்றது. இதனால் பொருள் விலைளும் வாழ்க்கை செயலவும் உச்சம் தொடும்.
3.ஹஜ்பெருநாள் தினங்களில் முஸ்லிம்களின் சமயக் கடமைகளுக்கு தடைகள் வரும். அதை பாவித்து அரசுக்கு எதிராக சமூகத்தை தூண்டிவிட எதிபார்த்தவர்களுக்கு ஏமாற்றம்.
4.தனக்கும் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் தர முடியுமாக இருந்தால்; நேரடியாக சாட்சிதர நாட்டுக்கு வரமுடியும்-அசாட் மௌலான புதிய வாக்குமூலம்.
5.பதினொரு வயது சிறுமியை அனுராதபுரத்தில் பிரதான தேரர் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதை நாட்டில் பிரதான ஊடகங்கள் மூடிமறைப்பதாக குற்றச்சாட்டு.
6.விமான விவகாரமொன்றில் முன்னாள் கியுபா அதிபர் ராகுல் கஸ்ரோவுக்கு (94வயது) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசு வழக்குத் தாக்கல் செய்யப்போவதாகத் தகவல்கள்.
7.திலித் கட்சி முக்கியஸ்தர் திலும் அமுனகம பதினொரு வயது சிறுமியை விபச்சாரியென அழைத்து தேரரை நியாயப்படுத்த எடுத்த முயற்சிக்கு கடும் விமர்சனம்.





