நஜீப்
04.01.2026 ஞாயிறு தினக்குரல்
1.ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக 2030 முதல் 2035 வரை சிறையில் இருப்பார். இப்படித் தீர்ப்புச் சொல்லி இருப்பவர் கம்மன்பில.!
2.தனக்குத் தெரியாது அர்ஷ டி சில்வா அமெரிக்க தூதுவர் ஜூலியைச் சந்தித்ததால் சஜித் கொதித்துப் போய் இருக்கின்றாராம்.!
3.கனிசமான என்பிபி. உறுப்பினர்கள் நாடாளுமன்ற வரவும் திரும்பவும் பொதுப்பிரயாண வசதிகளையே பாவிக்கின்றார்களாம்.!
4.கண்ணத்தில் அறைவேன். பி.செயலாளர் நிவாரணப்பணிகளுக்கு போகவேண்டுமா? இப்படி கண்டியில் ஒரு தவிசாளர் மிரட்டலாம்!
5.கச்சதீவைக் கேட்கும் விஜக்கு நாமல் வாழ்த்து. தேர்தலில் திமுக.36. தவெக.32 அதிமுக.24 இதர.08 சதவீதம். இது நமது கணிப்பு!
6.கைதான டக்லசும் எல்லாரையும் போல வைத்தியசாலையில். மெமரியும் போய்விட்டதாம். எடுத்ததும் கொடுத்ததும் தெரியாதாம்!
7.கொழும்பில் மு.கா.உறுப்பினர் ஆதரவு ஹக்கீமின் நாடகமாகவும் இருக்கலாம். பல இடங்களில் மு.கா.அரசை ஆதரித்திருக்கின்றது.!





