காலி முகத்திடல் போராட்டம் 5/5 ….?

எதிர்வரும் ஐந்தாம் திகதி, மாலை ஐந்து மணிக்கு முன்னதாக காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அகற்றப்படவேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். 

சற்று முன்னர் குறித்த இடத்திற்கு அதிகளவான பொலிஸார் வருகைத் தந்து விசேட உத்தரவொன்றினை வாசித்து காட்டியிருந்தனர்.

கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போதே,  எதிர்வரும் ஐந்தாம் திகதிக்குள் காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் பயிர்செய்கை மேற்கொண்ட இடங்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும் என அறிவித்துள்ளனர்.

மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Story

கண்டியில் ஐதேக முக்கியஸ்தர்களுடன் ஜனாதிபதி ரணில்

Next Story

ரணிலின் இரட்டை வேடம் நிலைப்பாடு அம்பலம்