-நஜீப்-
மஹவலி அமைச்சராக இருந்து ஜனரஞ்சகமானவர் காமினி திசாநாயக்க. அவர் ஐதேக.வில் செல்வாக்கான ஒரு தலைவரும் கூட. ஜனாதிபதி வேட்பாளராக வந்து குண்டடிபட்டு இறந்தவர்தான் இந்த காமினி.
புகழ்பெற்ற யாழ் நூலத்துக்கு தீ மூட்டியவர்களில் முன்னணியல் இருந்தவர் என்று குற்றம் சாட்டப்படுகின்றவர்தான் இந்த காமினி. இவரின் மூத்த மகன் நவின் திசாநாயக்க கரு ஜயசூரிய மருமகன். மாமனருடன் இணைந்து அவர் பல முறை பல்டி அரசியல் செய்து வந்திருக்கின்றார்.
இன்று அவர் ரணில் அணியில் முக்கியஸ்தர். காமியின் இளைய மகன் மயந்த திசாநாயக்கவும் அரசியலில் பல முறை குரங்குத் தொழில் பார்த்தவர்தான். அண்மையில் கட்சி தீர்மனத்துக்கு முற்றிலும் மாற்றமாக ரணில் விசுவாச பதவி பெற்ற போது கட்சியில் கடும் எதிர்ப்பு.
சஜித் அணி முக்கியஸ்தர் கிரியெல்ல இந்தப் பதவியை அர்ஷத டி சில்வாவுக்கு விட்டுக் கொடுக்மாறு கேட்ட போது அதனை மயந்த மறுத்து விட்டார். பின்னர் சஜித் தலையிட்டு அவர் பதவி விலகி அர்ஷவுக்கு பதவி கிடைத்தது. எனவே ரணிலின் உளவாளிகள்தான் இன்னும் சஜித் அணியில் இருப்பது இதில் உறுதியாகின்றது.
நன்றி: 05.03.2023 ஞாயிறு தினக்குரல்