காசா போகும் ஹக்கீம் கப்பல்!

-நஜீப்-

நன்றி 24.08.2025 ஞாயிறு தினக்குரல்

முஸ்லிம்கள் சுமந்திரன் ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தார் ஹக்கீம். மு.கா. கோட்டையான காத்தான்குடியில் கூட அது நடக்கவில்லை. அது கலாநிதி கோட்டை.

தலைவர் பேச்சை எவரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்றுதானே நாம் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.! என்பிபி. பிரதி அமைச்சர் முனீர் கூட இதனைச் சுட்டிக்காட்டி இருந்தார். இப்போது ஹக்கீம் காசாவுக்கு நிவாரணப் பொருட்களை கப்பலில் அனுப்பப் போகின்றாராம்.

நல்ல காரியம் நடக்கட்டும் பார்ப்போம். இதே போன்று அண்மையில் பொத்துவிலில் நடந்த ஓர் நிகழ்வில் அரசின் முரண்பாடுகள் பற்றி விலாசி இருந்தார் ஹக்கீம்.

முரண்பாடுகள்-வஞ்சனைகள் என்ற தலைப்பில் ஹக்கீம் கதை சொல்வதாக இருந்தால் தொடர் கதைகள் அல்ல புத்தங்கள்தான் போட வேண்டும்.

இதில் நமக்குத் தெரிந்த கதைகளும் நிறையவே இருக்கின்றன. ஹிஸ்புல்லாஹ் பற்றி இவர் பேசிய வார்த்தைகளை மட்டும் ஒரு முறை நினைத்துப்பாருங்கள்.!

Previous Story

கட்டார் நாடு றிஷாட்டுக்கு 600 மில்லியனை வழங்குகிறது!

Next Story

දිලිත් ඔයාගේ හාමුව පුළුවන්නම් පැයකට හරි අත්අඩංගුවට ගන්න කිව්වනේ ඔන්න ගත්තා!