காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம்: திடீரென மனம் மாறிய இஸ்ரேல்!

 ஓகே சொன்னது ஏன்?

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நடக்கும் போரை 4 நாட்கள் தற்காலிகமாக நிறுத்துவதற்கு இஸ்ரேல் திடீரென ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில் தான் அதன் பின்னணி பின்னணியில் உள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் ஆகியவை பக்கத்தில் பக்கத்தில் உள்ளன. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசாவில் ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது.

இதனால் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தெரிவித்துள்ளது. மேலும் இருதரப்பும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தான் கடந்த மாதம் 7 ம்தேதி இந்த மோதல் என்பது போராக மாறியது.

அதாவது அன்றைய தினம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. அதோடு இஸ்ரேல் எல்லையை தகர்த்து அந்த நாட்டுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி பொதுமக்களை சிறைபிடித்து சென்றது.

காசா மீது அணுகுண்டு போட தயாரான இஸ்ரேல்? அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்.. ஷாக்கில் உலக நாடுகள் இதனால் கோபமடைந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் தொடங்கிவிட்டதாக கூறி தாக்குதலை தொடங்கினர். காசாவில் முதலில் வான்வெளி தாக்குதல் நடத்தப்ப்பட்டது. அதன்பிகு வடக்கு காசாவில் பல இடங்களில் இஸ்ரேல் படைகள் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது.

தற்போது போர் 46வது நாளாக நடந்து வருகிறது. இதுவரை காசாவில் 14 ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 2000க்கும் அதிகமானவர்களும் பலியாகி உள்ளனர். மேலும் இந்த போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 4 நாட்கள் காசாவின் பகுதிகளில் இஸ்ரேல் குண்டு வீசக்கூடாது.

வான்வெளி தாக்குதல், தரைவழி தாக்குதல் நடத்தக்கூடாது.

ராணுவ வாகனங்களின் இயக்கம் என்பது காசாவில் இருக்க கூடாது.

தெற்கு காசாவில் ட்ரோன்கள் பறக்க கூடாது.

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் காசா பகுதியில் இருந்து எங்கு வேண்டுமானாலும் நடமாடலாம்.

இந்நிலையில் தான் தற்போது காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் ‛ஓகே’ கூறியுள்ளது. அதாவது நாளை முதல் 4 நாட்கள் காசாவில் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த கத்தார் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு அமெரிக்காவும் உதவியது. இந்நிலையில் தான் கத்தார் எடுத்த நடவடிக்கையின் ஒருபகுதியாக ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என 50 பிணைக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து பிணைக்கைதிகளை மீட்கும் வகையில் 4 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஓகே சொல்லி உள்ளது. அதன்படி நாளை முதல் 4 நாட்களில் 50 இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுக்கவிக்க உள்ளது. அதன்பிறகு அடுத்த 10 நாட்களுக்கு தினம் 10 பிணைக்கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த போர் நிறுத்த நடவடிக்கையின் போது மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு வரும் உதவிகள் அனுமதிக்கப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இங்கு போர் தொடர்ந்து நடந்து வந்த மோதலுக்கு நடுவே காசா மக்களுக்கு இந்த போர் நிறுத்த நடவடிக்கை என்பது சற்று ஆறுதலான அம்சமாக உள்ளது. அதோடு இந்த 4 நாள் தற்காலிக போர் நிறுத்தம் என்பது முழு போர் நிறுத்தமாக வரும் நாட்களில் மாற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எண்ணமாக உள்ளது. அது நடக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Previous Story

காஸாவில் போர் நிறுத்தம், 50:300 பணயக் கைதிகளை விடுவிக்க உடன்பாடு

Next Story

பாலத்தீனம்-எண்ணெய்: மேற்கு உலகை மிரட்டும் அரபு நாடுகள் !