சமகால முஸ்லிம் அரசியல்வாதிகளில் கலாநிதி ஹிஸ்புல்லா ஒரு கில்லாடி-நல்ல ஆட்டக்காரன். தலைவருடன் முறுகலில் இருந்த போது இருவரும் மோசமாகத் திட்டிக்கொண்டார்கள். ஒன்றிணைந்தாலும் பாவித்த வார்த்தைகளினால் ஒருவர் மீது ஒருவருக்கு நல்லெண்ணம் வளர வாய்ப்பில்லை.
இன்று ஹிஸ்புல்லாவின் தங்க வியாபாரம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. தனது வருமானம் பற்றிய தகவலில் வங்கியில் ஐந்து மில்லியன் இருப்பதாகவும் பென்சன் மட்டுமே அவரது வருமானமுமம்.
இந்த நிலையில் அவர் எப்படி அறுபது கோடியில் கானாவில் தங்க வியாபாரம் பண்ணினார்? அதற்கு எங்கிருந்து காசு என்றும் இப்போது கேள்விகள்.!
அவர் கானாவில் கொடுத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து அங்கு பலர் கைதாகி இருக்கின்றார்கள். கதை தப்பானது என்பது கலாநிதி வாதம்.! அதற்கு அவர் போடும் முடிச்சுக்கள் எந்தளவுக்கு ஏற்புடையாது.?
பதினொரு கானாக்களுடன் தனக்கு 2023லிருந்து தொடர்பு என்பதையும் அவர் ஏற்கின்றார்.! அது என்னவகை உறவு?





