கலவரம் வெடிப்பு! ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு  செய்தி

தற்போது நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை வன்மையாக கண்டிக்கின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.

அனைத்து குடிமக்களும் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடியை தீர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Strongly condemn the violent acts taking place by those inciting & participating,irrespective of political allegiances. Violence won’t solve the current problems.
I request all citizens to remain calm & exercise restraint. I urge everyone to work together in solving this crisis

— Gotabaya Rajapaksa (@GotabayaR) may 09 2022

அரசியல் பக்கசார்பின்மையை பொருட்படுத்தாமல் தூண்டி விடப்படும் மற்றும் பங்கேற்பவர்களினால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை வன்மையாக கண்டிப்பதாக ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வன்முறைகள் தற்போதைய நெருக்கடியை தீர்க்காது எனவும் அவர் கூறியுள்ளார். அனைத்து பிரஜைகளும் அமைதியாகவும் பொறுமையுடனும் செயற்படுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் இந்த நெருக்கடிக்கு தீர்வுகாண அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு அலரி மாளிகை மற்றும் காலிமுகத் திடலில் கோட்ட கோ கம பகுதிகளில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாகவே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தின் பின்னர், அதில் கலந்துக்கொண்டவர்கள், அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கியதுடன் அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை உடைத்து சேதப்படுத்தினர். இதனையடுத்து, அவர்கள் காலிமுகத் திடல் கோட்டா கோ கமவை நோக்கி சென்றனர்.

காலிமுகத் திடலுக்கு அருகில் பொலிஸார் அவர்களை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. கோட்டா கோ கம பகுதிக்குள் சென்ற ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் அங்கும் தாக்குதல் நடத்தினர்.

முன்னதாக ஆளும் கட்சியினரை கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடுக்காத பொலிஸார், கோட்டா கோ கமவுக்குள் சென்றது, அந்த இடத்தை நோக்கி கண்ணீர் புகை குண்டு தாக்குதலை நடத்தினர்.

ஆளும் கட்சியினருடன் சனத் நிஷாந்த உட்பட சில முன்னாள் அமைச்சர்களும் சென்றதாக கூறப்படுகிறது. எவ்வாறானும் ஆளும் கட்சியின் வன்முறையாளர்களின் தாக்குதலில் கோட்டா கோ கம போராட்டகாரர்களில் 24 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசா  லையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous Story

நாட்டுப் பற்றைக் காட்ட பதவியேற்றதாகக் கூறிய அலி சப்ரியும் ஓட்டம்!

Next Story

மகிந்த கஹந்தகமவுக்கு எதிர்பாராத தண்டனை