கர்நாடகாவில்  இறைச்சி விற்பனை செய்தோரை தாக்கிய  5 பேர் கைது

Human fingerprints and handcuffs

கர்நாடகாவில் ஹலால் இறைச்சி விற்பனை செய்தவர்களை தாக்கிய பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

ஹலால் இறைச்சிக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களை அம்மாநிலத்தில் தடை செய்யுமாறு விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளின் பிரசாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஷிவமோகா மாவட்டத்தில் இந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்கு யுகாதி பண்டிக்கைக்கு அடுத்த நாள் கொண்டாடப்படும் ‘ஹோசா தடாகு’ என்ற பண்டிகையின் போது, இந்துக்கள் அசைவ உணவு சாப்பிடுவார்கள். இந்நிலையில், அசைவு உணவு சாப்பிடும் இந்துக்கள் ஹலால் உணவை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று வலதுசாரி அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஹலால் இறைச்சி, அல்லாவுக்கு ஏற்கனவே வழங்கப்படும். அத்தகைய உணவை சாப்பிடுவது இந்து கடவுளை அவமதிக்கும் செயல் என்று கருத்தை அவர்கள் முன்வைக்கின்றனர்.

ஹோசமானே காவல் நிலையம் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், ஐந்து பேர் ஒரு கடைக்கு சென்றுள்ளனர். அவர்கள் ஹலால் அல்லாத இறைச்சியை கேட்டுள்ளனர். அது வழங்கப்படாத நிலையில், கடையை அவர்கள் மூடியுள்ளனர். மேலும், கடையில் இருந்த ஒரு சிறுவனையும் தாக்கியுள்ளனர் என்று காவல்துறை கண்காணிப்பாளர் பி.எம்.லட்சுமி பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்று பத்ராவதி பகுதியில் இரண்டு சம்பவங்கள், ஹோசமானே காவல் நிலையம் கட்டுப்பாட்டு பகுதியில் ஒன்றும், ஓல்ட் டவுன் பகுதியில் மற்றொரு சம்பவமும் நடந்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.

“ஒல்ட் டவுன் பகுதியில் நடந்த சம்பவத்திலும், ஹோசமானே பகுதியில் நடந்த சம்பவத்திலும் ஐந்து பேர் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் வடிவேல், ஸ்ரீகாந்த் கிருஷ்ணா, சவாய் சிங் மற்றும் குண்டா. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.

Previous Story

பாலியல் உறவு : சரியான வயது என்ன?

Next Story

கோட்டாபயவின் பிரசார பாடலை எழுதியவர் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்!