கரைபுரலும் இன ஒற்றுமை!

நஜீப்

இந்த அரசு பதவிக்கு வருவதற்காக இனங்களை பிளவுபடுத்தி வைத்திருந்தது. குறிப்பாக முஸ்லிம்கள் மீது அபான்டங்களைச் சொல்லி அவர்களை பேரினத்தாரிடமிருந்து பகைமைப்படுத்தி இவர்கள் தேர்தலில் பெரு வெற்றியும் பெற்றுக் கொண்டார்கள். அதற்கு சில ஊடகங்களும் துனைக்கு நின்றன. ஈஸ்டர் தாக்குதல் கூட இந்த அரசு பதவிக்கு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி.

இவற்றை எல்லம் சிங்களவர்களாகிய நாம் இன்று நன்றாகப் புரிந்த கொண்டோம்-அன்று நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம். இதற்குப் பின்னர் இப்படியான கதைகளைச் சொல்லி இனங்களைப் பிரிக்க முடியாது. கோட்டா போ (GOTA GO HOME) என்ற கோஷத்துடன் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் கிருஷ்துவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்த விட்டோம். அந்த வகையில் இதில் ஒரு மகிழ்ச்சி கூடத் தெரிகின்றது.

இப்போது நாங்கள் அனைத்து சமூகங்களும் ஒருமித்த குரலில் கூருகின்றோம் நீங்கள் உங்கள் நாட்டுக்குப் போய்விடுங்கள். அதற்கு முன்னர் எங்களிடம் கொள்ளையடித்த பணத்தை தந்து விடுங்கள் என்ற கோஷத்தை சிங்கள சமூகத்தினரே இப்போது உரத்து எழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான கோஷங்கள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.

நன்றி: ஞாயிறு தினக்குரல் 10.04.2022

Previous Story

புதிய மத்திய வங்கி ஆளுனர்   அரசுடன் முரண்படுகின்றார் கோட்டாபய அதிர்ச்சியில்!!

Next Story

நந்தசேன கோட்டாபய கொலைகாரன்- ராஜாங்கனே சாத ரதன தேரர்