-நஜீப்-
(நன்றி ஞாயிறு தினக்குரல்- 13/07/2025)
என்னடா தலைப்பு என்று யோசிக்கின்றீர்களா! கனவு என்பது இல்லாத ஒன்று-மாயை. அப்படித்தான் இந்தக் களவும். நாம் இங்கு பேசப் போவது நோயாளிகளுக்கு எமனான வந்த கெஹெல்லிய பற்றிய ஒரு செய்திதான். அவர் மீது டசன் கணக்கான குற்றச்சாட்டு. அதில் இது சற்று வித்தியாசமானது.
தனக்குத் தெரிந்த ஒரு வாகன விற்பனை நிலையத்துக்குப் போய் வாடகைக்கு ஒரு வாகனம் தேவை என மனிதன் கேட்க, நாங்கள் வாடகைக்கு வாகனம் கொடுப்பதில்லை என அவருக்கு அறிமுகமான அந்தப் பெண் உரிமையாளர் சொல்ல இல்லை. இல்லை. நீங்கள் எனக்கு வாகனம் தறவேண்டியதில்லை வாகன இலக்கத்துக்கான ஆவனங்களை மட்டும் தாருங்கள் என்று அதனைப் பெற்றிருக்கின்றார் அப்போதய சுக அமைச்சர்.
அந்த வாகன இலக்கத்துக்கு மாதாந்தம் 240000.ரூபா வாங்கி சௌக்கியம் கோடிக் கணக்கில் மக்கள் பணத்தை கொள்ளையடித்திருக்கின்றது. விவகாரம் இப்போது நீதி மன்றில். வேடிக்கை, வாகனத்தை தேடி சிஐடி விற்பனை நிலையம் சென்றபோது அந்த வாகனம் விற்பனையாகிய நெடுநாள் என்றும் தெரிகின்றது.





