நஜீப்
நன்றி 01.11.2026 ஞாயிறு தினக்குரல்
தற்போது எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகின்ற சஜித் தலைமையிலான ஐமச முற்றிலும் இனவாதிகளுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருவது தொடர்பாக அந்தக் கட்சியில் இருக்கின்ற சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் இப்போது பகிரங்கமாகவே முரண்பட்டு கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
சிறுபான்மை சமூகங்களைத் திருப்திப் படுத்துவதற்காகத்தான் பௌத்த தேரர்களுக்கு அரசு தொந்தரவு பண்ணிக் கொண்டிருக்கின்றது என்ற லக்ஸ்மன் கிரிஎல்லவின் வாக்குமூலம்தான் இதற்கு அடிப்படை.
அந்தக் கருத்துக்கு எதிராக முதலில் கல்லெறிந்தது மனோகணசன்தான். இப்போது தான் ஏனையவர்கள் வாய்திறக்க ஆரம்பித்திருக்கின்றார்கள்.
ஐமச. நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் நாம் ஐமச. இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இருப்போம் என்று தெரியாது என்று கூறி இருந்தார்.
அஇம. காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதூர்தீன் சஜித்திடமோ இது பற்றி கடும் கண்டனத்தை வெளியிட்டதாக கூறி வருகின்றார். ஆனால் இதுவரை சஜித் மற்றும் ஹக்கீம் வாய்திறக்கவில்லை.




