கண்டியில் SLMC வாக்குப் பலம்

கண்டியில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த முறையும் போட்டியிடுகின்றார். அதற்காக அவர் தற்போது கண்டியில் முகாமிட்டிருக்கின்றார். கடந்த 2015 பொதுத் தேர்தலில் அவர் 102186 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். ஹலீம் அவரைவிடவும் 8825 அதிக வாக்குகளைப் பெற்றார்.

ஆனால் 2013 நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் ஹக்கீமின் மு.கா.தனித்துப் போட்டியிட்டு வெறும் 11137 வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டது. அதில் வெற்றி பெற்ற உவைஸ் கலாநிதி அவர்களின் தனிப்பட்ட வாக்குகளும் அடங்கி இருக்கின்றன. இவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்.

கண்டி மாவட்டத்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களின் தாராள மனசு காரணமாக ஹக்கீமால் சுலபமாகப் பெருந் தொகையான வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. இந்த முறை ஐக்கிய தேசியக் கட்சி சஜித்-ரணில் எனப் பிளந்திருப்பதால் என்ன நடக்கும் என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

புதிய அரசியல் யாப்புக்கு 2/3 !

Next Story

வஞ்சிக்கப்படும் நமது இளசுகள்