கடைசிக் கப்பலும் வந்தாச்சி!

நஜீப்

கடலுக்குப் போன மச்சான் கரைக்கு வந்த, வராத கதைகளை நாம் கரையோரங்களில் பார்த்திருக்கின்றோம். ஒரு நாட்டுக்கு கப்பல்கள் வருவதும் போவதும் வழக்கமான செய்திதான். ஆனால் இன்று நமது நாட்டுக்கு கப்பல்கள் வருவதே குதிரைக் கொம்புக் கதைதான். இந்தியாவில் எரிபொருள், சமயல் எரிவாயு மற்றும் சரக்குகள் கப்பலுக்கு ஏற்று முன்னரே மக்கள் இங்கு தெருக்களில் கியூவில் நிற்பதும் நமக்குப் பழங்கதை.

இந்த வாரம் நாம் நாட்டுக்குச் சொல்லப் போவதுகடைசிக் கப்பலும் வந்தாச்சிகதை. மோடி அரசு தற்போது நமக்கு நேரடியாகக் கடன் தருவதில்லை. ஆனால் அங்குள்ள நிறுவனங்கள் சரக்குகளை நமக்கு அனுப்ப அந் நிறுவனங்களுக்கு இந்தியா அரசு  காசு கொடுத்து விடுகின்றது. இந்தியா தனது கணக்குப் புத்தகத்தில் இலங்கையின் கடன் வரவுப் பக்கத்தில் அந்தத் தொகையைப் பதிந்து கொள்கின்றது.

அப்படிக் கடன் வழங்கும் உடன்பாடும் நேற்று நாட்டுக்கு வந்த டீசல் கப்பலுடன் முடிகின்றது. இதன் பின்னர் புதிய கடன் என்றால் நாட்டில் எந்த கேத்திர இடம் நமக்கு என்பது இந்தியா கேட்கும்  கேள்வியாக இருக்கும். நிலத்தை விற்று சூதாட்டம் போட்டவன் கதைதான் இது.! எப்படி இருக்கின்றது ஆசியாவின் ஆச்சர்யம்?

நன்றி:19.06.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பழைய வாழ்வு மீண்டும் வருமா!

Next Story

இராணுவம் மக்களின் மனநிலையை புரிந்துகொள்ள வேண்டும்-ஐ.நா