கஞ்சி தப்பித்தது எப்படி?

நஜீப்

நன்றி:09.08.2026 ஞாயிறு தினக்குரல்

கஞ்சிப்பானை இம்ரான்> முஸ்லிம் பாதாள உலக கோட்பாதர் என்றும் பேசப்படுகின்றார். இதற்கு முன்னர் பொட்ட நௌபர் அப்படி இருந்தார். ஆனால் இந்த கஞ்சிப்பானை அவரை விட கில்லாடி போலத் தெரிகின்றது. ஜனாதிபதி அனுரவை தீர்த்துக்கட்டவும் திட்டம் போட்டார் என்றும் ஒரு கதை.

இம்ரான் எப்படி கஞ்சிப்பனையானார் என்று தேடிப்பார்த்தால் சிறுவனாக இருந்த போது நோன்பு காலத்தில் பள்ளியில் விநியோகிக்கப்படும் கஞ்சியை வாங்கப் போன இடத்தில் முழு ஆடையிலும் அதனை கொட்டிக் கொண்டு வீடு வர,

அதனைப் பார்த்த அவரது சிறியதாயர் ஐயோ கஞ்சிப்பானை… என்று கத்த அன்றிலிருந்து இம்ரான் கஞ்சியானார், அவர் சிறுவயதில் கஞ்சி வியாபாரம் பண்ணியதால் இந்த நாமம் என்றும் கதைகள்.

அது எப்படியோ மலேசியாவில் பொலிஸ் அதிகாரி ஓலுகல பிடியிலிருந்து இவர் தப்பியது உள்ளிருந்து போன தகவல் மற்றும் மலேசியா செல்ல காலதாமதமானதும் என்றும் தெரிகின்றது.

Previous Story

மோதிப் பார்ப்போம்-முதலிகே!

Next Story

ஈரான் உலகின் நான்காவது வல்லரசாகப் போகிறது டிரம்ப் கவலை