ஓமன் துணை விமானியை விட்டுடுங்க..?

வெளிவராத தகவல்

ப்ளைதுபாய்’ விமானத்தில் இந்திய விமானியை இரக்கமேயின்றி கத்தியால் குத்திவிட்டு விமானத்தை தரையில் மோதி வெடிக்க செய்து 174 பயணிகள், 6 விமான பணியாளர்களை கொல்ல முயன்ற கொடூரன் தான் ஓமன் துணை விமானி ஹமிம் அல் ஹமாமிக்கு யாராவது இரக்கம் காண்பிப்பார்களா?. நிச்சயமாக இல்லை என்று நீங்கள் சொல்வீர்கள்.

ஆனால் உண்மையிலேயே ஓமன் துணை விமானியை கட்டிவைக்க கூடாது. அவரை விட்டு விடுங்கள் என்று சம்பவ இடத்தில் பயணிகளிடம் சண்டைக்கு போய் சில விமான பணியாளர்கள் கெஞ்சிய தகவல் வெளியாகி உள்ளது.

துபாய் – டெல்அவிவ் விமானத்தில் ஓமன் துணை விமானி ஹமிம் அல் ஹமாமி, இந்திய பைலட்டான கேப்டன் ஸ்மித் மச்சாரை கத்தி மற்றும் ‘காக்பிட்’ கோடரியால் தாக்கினார். ரத்த காயங்கள் இருந்தாலும் ஸ்மித் மச்சார் காக்பிட் கதவை திறந்தார்.

விமானத்தில் பயணித்த திவிகா மானேஸ், யனிவ் ஹயூன், ஆசஃப் ரஜுவான் ஆகியோர் உள்ளே சென்று இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை மீட்டனர். ஓமன் துணை விமானி ஹமிம் அல் ஹமாமியை சிறைபிடித்து விமானத்தில் கட்டி வைத்தனர்.

இதற்கு டேனியல் ஷ்லிச்சர் என்பவர் உதவினார். ஹெட்போன் வயர்கள் உள்ளிட்டவற்றை அவர் தான் சேகரித்து கொடுத்தார்.  ரொம்ப பெருமையா இருக்கு இந்நிலையில் தான் ஓமன் துணை விமானி ஹமிம் அல் ஹமாமியை கட்டி வைக்கக்கூடாது அவரை விட்டு விட வேண்டும் என்று விமான பணியாளர்கள் கூறியுள்ளது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக விமானத்தில் பயணித்த திவிகா மானேஸ், டேனியல் ஷ்லிச்சர் என்பவரிடம் பேட்டியெடுத்து ‘தி நியூயார்க் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. அதில் இருவரும் கூறியுள்ளதாவது:

”விமானத்தில் ஓமன் துணை விமானியை பயணிகள் சிறை பிடித்தோம். அதன்பிறகு முகம் தரையில்படும்படி அவரை குப்புற படுக்க வைத்தோம். அவரது கையை முதுகுக்கு பின்னால் வைத்து ஜிப்-டை மற்றும் ஹெட்ஃபோன் வயர்களை கொண்டு கட்டி வைத்தோம்.

அப்போது விமான பணியாளர்கள் சிலர் ஓமன் துணை பைலட்டை கொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி அவரை விடுவிக்க வேண்டும். விமானத்தில் நாங்கள் தான் பொறுப்பில் இருக்கிறோம்.

இதனால் விமானி அறைக்கு வெளியே உள்ள பகுதியை விட்டு பயணிகள் வெளியேற வேண்டும் என்று கூறினர். இது எங்களுக்கு விமான பணியாளர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

திடுக் தகவல் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நாங்கள் நாங்கள் அவரை (ஓமன் துணை விமானி) கொல்ல விரும்பவில்லை. அவர் எங்களை கொல்லாமல் இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறோம் எனக்கூறினோம்.

மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அவரை கொல்ல வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை.

இதனால் உயிருடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஆக்சிஜன் மாஸ்க்கையும் நாங்கள் ஓமன் துணை விமானிக்கு கொடுத்தோம்” என்று கூறியுள்ளார்.

Previous Story

அதிர்ந்துபோன கோட்டா!

Next Story

மதுராந்தகம், தாராபுரத்தில் வெல்லப்போவது யார்?