வானத்தில் நடந்த அதிசயம்..
அது எப்படி சாத்தியம்!

பூமியின் எந்தவொரு இடத்திலும் நடக்காது ஒரு அதிசயம் ரஷ்யாவில் நடந்திருந்தது. அங்குள்ள சகாலின் என்ற பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு சூரியன்கள் உதித்துள்ளது. இது தொடர்பான போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், இது எப்படிச் சாத்தியம் எனத் தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
இதற்கான காரணம் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! ரஷ்யாவின் சகாலின் என்ற பகுதியில் எடுக்கப்பட்ட போட்டோ தான் அப்போது பேசுபொருள் ஆகியுள்ளது. பனி படர்ந்த இந்தப் பகுதியில் இடது பக்கம் ஒரு சூரியன், வலது பக்கம் ஒரு சூரியன் என ஒரே நேரத்தில் இரண்டு சூரியன்கள் உதிப்பதைப் போன்ற அரிய காட்சியை அங்குள்ள பொதுமக்கள் கண்டனர்.
இது நெட்டிசன்களை குழப்பிய நிலையில் ஆய்வாளர்கள் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளனர். சூரிய நாய் இந்த அரிய நிகழ்வின் பெயர் ‘சூரிய நாய்’, அதாவது Sundog என்கிறார்கள். இது ஒரு வளிமண்டல ஒளி விளைவு ஆகும்.
குளிர்ந்த காற்றில் மிதக்கும் பனிக்கட்டிகள் மீது சூரிய ஒளி மோதும்போது இந்த மாயத்தோற்றம் ஏற்படுகிறது. இது “போலி சூரியன்கள்” போல் காட்சியளிக்கும். இவை உண்மையான சூரியனுக்கு இடது பக்கமும் தோன்றும்.. வலது பக்கமும் தோன்றும். சில நேரங்களில் இருபுறமும் தோன்றும்.

இந்தப் பிரகாசமான பெயர் ‘பார்ஹீலியா’ (Parhelia) என்று இன்னொரு பெயரும் உள்ளது. இதற்கு கிரேக்க மொழியில் “சூரியனுடன் இணைந்து” என்று பொருள். என்ன காரணம் இது நெட்டிசன்களுக்கு வேண்டுமானால் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் கூட இது ஆய்வாளர்கள் நன்கு புரிந்து கொண்ட ஆவணப்படுத்திய ஒரு விளைவாகவே உள்ளது.
குறிப்பாகக் குளிர்ந்த காலநிலையில் இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுமாம். Powered By சூரிய ஒளிவட்டங்கள் (sun haloes) மற்றும் சந்திர ஒளிவட்டங்கள் (moon haloes) போன்ற பல ஒளி விளைவுகளைப் போலவே இந்தச் சூரிய நாய்களும் ஒன்று என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இந்த அனைத்து நிகழ்வுகளும் வளிமண்டலத்தின் மேலடுக்கில் உள்ள பனிக்கட்டிகளுடன் சூரிய ஒளி வினைபுரிவதால் ஏற்படுகின்றன. ஏன் ஏற்படுகிறது சூரிய நாய்களின் மையத்தில் நுண்ணிய, அறுகோண வடிவ பனிக்கட்டிகள் உள்ளன.
இவை பொதுவாக 20,000 முதல் 40,000 அடி உயரத்தில் உள்ள சிர்ரஸ் (cirrus) அல்லது சிர்ரோஸ்ட்ரேடஸ் (cirrostratus) மேகங்களில் காணப்படும். சில சமயங்களில், வெப்பநிலை -30 டிகிரி செல்சியஸுக்கும் கீழ் செல்லும்போது, diamond dust போல் பனிக்கட்டிகள் உருவாகலாம்.
இதன் உள்ளே சூரிய ஒளி நுழையும்போது, 60 டிகிரி கோணத்தில் உள்ள இன்னொரு பக்கம் வெளியேறும். இதுவே அந்தப் பிரகாசமான ஒளிக்குக் காரணம்.
மீண்டும் உயிர்ப்பிக்கும் ஆய்வாளர்கள் அதென்ன சூரிய நாய்? அது சரி இதற்கு ஏன் சூரிய நாய் என்று பெயர் வந்தது என்ற சந்தேகம் வரலாம். இந்த நிகழ்வுக்கு அறிவியல் காரணம் இருந்தாலும் கூட இந்த பெயர் பண்டைய நம்பிக்கைகளில் இருந்து வந்ததாகக் கருதப்படுகிறது. எஜமானனைப் பின்தொடரும் நாய்களைப் போல இந்தப் பிரகாசமான புள்ளிகள் தோன்றின.
எனவே, வானத்தின் கடவுளான ஜீயஸ் தனது நாய்களுடன் வானத்தில் பயணிப்பதாலேயே இந்த நிகழ்வு நடப்பதாகப் பண்டைக் காலத்தில் மக்கள் கருதியுள்ளனர். இதன் காரணமாகவே இவை சூரிய நாய்கள் என அழைக்கப்படுகிறது.
இந்த சூரிய நாய்கள் நிகழ்வு உலகின் எந்தப் பகுதியிலும் தோன்றலாம். சரியான சூழ்நிலைகள் அமையும்போது இவற்றை எளிதாகக் காண முடியும். சூரியன் அடிவானத்திலிருந்து தாழ்வாக இருக்கும் காலை அல்லது மாலை நேரங்களில் இவை தெளிவாகத் தெரியும்!




