ஒரு MPக்கு 128 மதுபான நிலையங்கள்

சட்ட ரீதியாக மொத்த  4910
அரசியல்வாதிகளுக்கு 2000+

குடும்பத்தை மையமாக கொண்ட தேர்தல் முறைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை பயன்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

நாடு முழுவதிலும் இருக்கும் மதுபான விற்பனை நிலையங்களில் பெரும்பாலானவை அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு சொந்தமானது என்பதாலேயே மதுபான அச்சுறுத்தலில் இருந்து நாட்டை மீட்பது கஷ்டமான காரியமாக மாறியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் சட்ட ரீதியாக அனுமதிப் பெற்ற 4 ஆயித்து 910 மதுபான விற்பனை நிலையங்கள் இருக்கின்றன.

அவற்றில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான விற்பனை நிலையங்களின் உரிமை தற்போது அரசியலில் ஈடுபட்டு அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 128 மதுபான விற்பனை நிலையங்கள் இருப்பதாகவும் டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Story

இறப்பராகும் தீர்வுக் கதை!

Next Story

JVP:அணுர வெற்றிப் பயணம்!