நஜீப்
நன்றி 02.11.2025 ஞாயிறு தினக்குரல்
இந்த என்பிபி. அரசு எமக்கு ஒரு பொருட்டே கிடையாது. நாங்கள் ஒரு விசிலில் சனத்தைக் கூட்வோம். இப்படிக் கூறுகின்றார் சாகல காரியவாசம்.
இந்தப் போதை வியாபாரத்துக்கு மத்தியிலும் மொட்டுக் கட்சிக்கு இந்தளவு செல்வாக்கா என்று மூக்கில் விரல் வைக்க வேண்டி இருக்கின்றது.
எது எப்படி இருந்தாலும் நாட்டில் அரசுக்கு எதிரான இரண்டு அணிகள் இருப்பது தெரிய வருகின்றது. சஜித் தலைமையிலான பிரதான அணி. அடுத்தது நாமல்-ரணில் தலைமையிலான பொதுக்கூட்டணி. அவற்றில் அமைப்பாளர்கள் என்று தலா 200பேர்வரை.
அவர்களின் பிரதேச சபை உறுப்பினர்கள் என இரு அணிகளிலும் ஏறக்குறைய ஒரு ஆயிரம் பேர். அவர்கள் தலா இருவரை அழைத்து பேரணிக்கு வந்தாலும் ஆகக்கூடியது ஒரு 5000 பேர்தான். அதுகூட பெருவெற்றியாக அமையும்.
அரசின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிரான பேரணியாம். இது பற்றி குடிகள் என்ன நினைக்கின்றார்களோ தெரியாது!-





