ஒரு குட்டிச் சந்தேகம்!

நஜீப்

இப்படியும் ஒரு தந்திரம் இருக்கின்றதா? ஆம் இருக்கின்றது.! கதை இதுதான். நமது தலைவர்கள் ஏதாவது தேவைகளுக்கு இந்தியாவுக்குப் போகும் போது இந்தியாவைத் திருப்திப் படுத்த ஏதாவது கதைகளைச் விடுவார்கள்.

சீனாவை தனது உயிர் நண்பன் என்பார்கள். இந்திய இராஜதந்திரிகளைச்  சந்திக்கும் போது நமக்கு நல்ல விசுவாசமான நண்பன் இந்தியாதான் என்பார்கள். உயிர் மேலானதா விசுவாசம் மேலானதா? பதிலை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நமது நிதி அமைச்சர் பீ.ஆர். சில தினங்களுக்கு முன் இந்தியா போவதாக இருந்தது.

அந்த நேரம் பார்த்து நமது கல்வி அமைச்சர் தினேஷ் மாகாண சபைத் தேர்தல்கள் விரைவில் வருகின்றது. அதுவும் பழைய விகிதாசார முறைப்படிதான். அதற்கான அனுமதிகள் ஓகே. துறைக்குப் பொறுப்பானவன் என்ற வகையில் விரைவாக தேர்தலை நடத்த வேலைகள் நடக்கின்றது என்று சொல்லி இருந்தார்.

இது இந்தியாவுக்கு பீ.ஆர். போய் இறங்கும் போது பல் பிடுங்குவதற்கு வசதியாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சார யுக்தியா என நமக்கு ஒரு குட்டிச்  சந்தேகம்.

நன்றி:ஞாயிறு தினக்குரல் 06.03.2022

Previous Story

ஒரு பில்லியன் டொலர் கடன்: இந்தியா இலங்கைக்கு கடும் நிபந்தனைகள்

Next Story

ஜெனீவாவில் சந்தர்ப்பத்தை நழுவவிட்ட இலங்கை!