ஐயா பயணம் சௌக்கியமா!

நஜீப்

ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு தமிழ் தரப்பினரை அழைத்த போது இது வெரும் ஏமாற்று வேலை இதில் அரசின் நலன்கள்தான் இருக்கின்றது. கடலில் மூழ்கிக் கொண்டிருக்கின்ற கப்பலில் ஏன் ஐயா ஏறப் போகின்றீர்கள் என்று நாம் துவக்கத்திலிருந்தே சொல்லி வந்தோம்.

அப்படி இருந்தும் மூத்தவர்கள் அரசியல் விற்பண்ணர்கள் என்று அழைக்கபடுகின்றவர்கள் பயணம் போய்த்தான் ஆக வேண்டும் என்று பிடியாக இருந்தார்கள். இப்போது சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஐயாவிடம் நாம்; கேட்பது எப்படிப் பயணம்.! எவ்வளவு தூரம் போய் இருக்கின்றீர்கள் எங்காவது கரைகள் கண்ணுக்குத் தெரிகின்றதா? (செபத) சுகமா என்றுதான் கேட்கத் தோன்றுகின்றது.

உங்களுக்கு ஏதோ உறுதி மொழிகள் தந்ததாகச் சொன்னீர்களே எப்போது சிறையில் இருப்பவர்களுக்கு விடுதலை? அந்தக் கதைக்கு இப்போ என்னாச்சி?  புலம்பெயர் தமிழர்கள் காசைப் போட்டு ராஜாகளுக்கு கை கொடுப்பதாக சொன்ன வாக்குறுதிகளுக்கும் என்ன ஆயிற்று?

நன்றி: ஞாயிறு தினக்குரல் 10.04.2022

Previous Story

போராட்டத்துக்கு ஓயாத அலைகள் என பெயரிட்ட சிங்கள ஊடகங்கள்!

Next Story

போராட்டங்களால் பிரச்சினையைத் தீர்ப்பது சிக்கலாகின்றது பந்தை கைமாற்றும் அரசு: பிரதமர் உரையின் சுருக்கம் இதுதான்!